என்னை பார்க்க யாரும் நேரில் வரவேண்டாம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.
அவருக்கு வாழ்த்து மழை குவிந்து வருகிறது. திமுகவினர் நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
திரை பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலமாக வாழ்த்து கூறுகிறார்கள்.
தனுஷ், ஜெயம் ரவி, அர்ச்சனா கல்பாத்தி, சிவகார்த்திகேயன், மாரி செல்வராஜ், அருண்ராஜா காமராஜ், பிரதீப் ரங்கநாதன், சதீஷ், சந்தானம், அருண் விஜய், வெங்கட் பிரபு, ஹரிஷ் கல்யாண், தமிழ் குமரன், சிபி சத்யராஜ், கார்த்தி, சிம்பு, விஜய் ஆண்டனி, எஸ்.ஜே. சூர்யா, நெல்சன் திலீப்குமார், போனி கபூர், தனஞ்செயன், அஜய் ஞானமுத்து, மஞ்சிமா மோகன், கார்த்திக் சுப்புராஜ், கவுதம் கார்த்திக் என பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அதேசமயம் பிற மாவட்டங்களில் இருந்து திமுகவினர் சென்னை வந்து உதயநிதிக்கு வாழ்த்து கூற திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என யாரும் என்னை நேரில் வந்து சந்திக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.
“தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, என்னை நேரில் சந்தித்து வாழ்த்த வேண்டும் என்ற முனைப்போடு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு வருகிறீர்கள். உங்களுடைய அன்பு என்னை நெகிழச் செய்கிறது. அதற்கு என்றும் நன்றிக்குரியவனாக நான் இருப்பேன்.
எனினும், முதலமைச்சர் கட்டளையின்படி, அவரவர் பகுதிகளில் நாம் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன. எனவே, மக்கள் பணி – கட்சிப்பணியில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம்.
என்னைச் சந்திப்பதற்காகச் சென்னைக்குப் பயணம் செய்வதைக் தவிர்க்குமாறு அன்போடும் – உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன். பல்வேறு மாவட்டங்களில் நான் அடுத்தடுத்துச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், நானே உங்களை அங்கே நேரில் சந்தித்து உங்களின் வாழ்த்துகளைப் பெற்றுக் கொள்கிறேன்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் இன்று (செப்டம்பர் 30) பதிவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
செந்தில் பாலாஜிக்கு சிக்கல்… சிறப்பு நீதிபதியை நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
திருப்பதி லட்டுவில் கலப்படம் – ஆதாரம் இருக்கிறதா?: சந்திரபாபுவுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!
