விஜய் திரையுலகில் அறிமுகம் ஆனபோது நடந்த சம்பவங்களை அவரது தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் மனம் திறந்து பேசியுள்ளார். no one director ready to introduce vijay : sac open talk
இயக்குநர் தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் ’பேரன்பும் பெருங்கோபமும்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாக உள்ளார். சிவ பிரகாஷ் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில், கதாநாயகியாக ஷாலி நிவேகாஷ், முக்கிய கதாப்பாத்திரத்தில் மைம்கோபி, கீதா கைலாசம், அருள்தாஸ், தீபா சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் பேரன்பும் பெருங்கோபமும் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியிட்டு விழா நேற்று (ஏப்ரல் 8) மாலை சென்னையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் எஸ்.ஏ.சி. சந்திரசேகர், கரு. பழனியப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

எத்தனையோ இயக்குநர்களிடம் போய் கேட்டேன்! no one director ready to introduce vijay : sac open talk
நிகழ்ச்சியில் எஸ்.ஏ.சி பேச தொடங்கும்போது, மேடையில் இருந்த சீமானை, ’தலைவர்’ என குறிப்பிட்டது கவனம் பெற்றது.
தொடர்ந்து அவர் பேசுகையில், “தமிழ் சினிமாவில் அதிக கவனம் பெற்ற இயக்குநர் தங்கர் பச்சான் தனது மகனை இன்னொருவரின் இயக்கத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். ஒரு பிள்ளையை செதுக்குவது சாதாரண விஷயமல்ல. அதனை இன்னொரு இளைஞரின் கையில் கொடுத்து செதுக்கியிருக்கிறார். இது தான் அவரது புத்திசாலித்தனம். எத்தனையோ இயக்குநர்களிடம் போய் கேட்டேன்!தொடர்ந்து அவர் பேசுகையில், “தமிழ் சினிமாவில் அதிக கவனம் பெற்ற இயக்குநர் தங்கர் பச்சான் தனது மகனை இன்னொருவரின் இயக்கத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். ஒரு பிள்ளையை செதுக்குவது சாதாரண விஷயமல்ல. அதனை இன்னொரு இளைஞரின் கையில் கொடுத்து செதுக்கியிருக்கிறார். இது தான் அவரது புத்திசாலித்தனம்.
நான் கூட அதைதான் நினைத்தேன். அது நடக்கவில்லை. நான் அப்போது பிசியான இயக்குநராக இருந்த காலம். என் மகன் விஜய் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டவுடன், போட்டோஷூட் எடுத்து, அதனை ஆல்பமாக வைத்துக்கொண்டு, எத்தனையோ இயக்குநர்களிடம் போய் கேட்டேன். ‘நான் தயாரிக்கிறேன். எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கிறேன். விஜய்யை நீங்கள் அறிமுகம் செய்யனும்’ என்று கேட்டேன். ஆனால் யாருமே ஏற்கவில்லை.
அதன்பின்னர் தயாரிப்பாளர்களிடம் போனேன். அப்போது தான் கடைசியாக, நானும் என் மனைவியும், அக்காலத்தில் தைரியமாக பலரை திரையுலகில் அறிமுகம் செய்து கொண்டிருந்த தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியை சென்று சந்தித்தோம்.
அப்போது அவர், “நீ தான் பெரிய டைரக்டர் ஆச்சே, நீ ஏன் அலைஞ்சிட்டு இருக்க? நீயே அவனை வச்சி படம் எடுய்யா” என்று சொன்னார். அதனால் தான் நானே விஜய்யை கட்டாயமாக படம் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் தங்கர் பச்சான் இப்போது அழகான வேலையை செய்திருக்கிறார்.
இப்படத்தின் இயக்குநர் சிவ பிரகாஷ் பாலு மகேந்திரா பட்டறையில் உருவானவர் என்கிறார்கள். ஒரு இயக்குநராக அவர் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்” என எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார்.