திருச்சி, தஞ்சாவூர் என்ற தனித்தனி கேள்விகளுக்கு இனி எந்த இடமுமில்லை. கட்சிக்கொடி, இரட்டைசிலை சின்னம் ஆகியவை இனி எடப்பாடி தலைமையிலான அதிமுகவினருக்கே சொந்தம் என்று சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இன்று (ஏப்ரல் 20) அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறுகையில், “பல்வேறு சட்ட போராட்டத்திற்கு பின்னர் இந்திய தேர்தல் ஆணையம் தற்போது எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்துள்ளது.
இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு. இதன்மூலம் மூன்றாம் தலைமுறை அதிமுகவை எடப்பாடி பழனிசாமி வலுவோடும், பொழிவோடும் வழிநடத்துவார்.
இது அதிமுக தொண்டர்களுக்கு ஊக்கத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது” என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “இனி திருச்சி, தஞ்சாவூர் என்ற தனித்தனி கேள்விகளுக்கு எந்த இடமுமில்லை. இனி கட்சிக்கொடி, இரட்டைசிலை சின்னம் ஆகியவை எடப்பாடி தலைமையிலான அதிமுகவினருக்கே சொந்தம்” என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா