போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜான் பிரிட்டோவுக்கும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கும் தொடர்பு இல்லை: தவெக

Published On:

| By Mathi

No links with drug kingpin TVK on Aadhav Arjuna

அமலாக்கத்துறையால் தேடப்படும் போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜான் பிரிட்டோவுக்கும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கும் (Aadhav Arjuna) எந்த தொடர்பும் இல்லை என தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தவெக ஐடிவிங் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதாவது: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மீது அபாண்டமான பொய் குற்றச்சாட்டை, அவதூறு செய்திகளை தற்போது பரப்பி, தங்கள் அரசியல் நாகரீகம் அற்றவர்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிருபணம் செய்துவருகிறார்கள்.

ADVERTISEMENT

அரசியலில் நேருக்கு நேர் எதிர்கொள்ள துணிவில்லாமல் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை குறிவைத்து உண்மைக்கு மாறான வதந்திகளை தொடர்ந்து பரப்பிவருகிறார்கள்.

தற்போது அமலாக்கத்துறை குற்றச்சாட்டில் சிக்கியுள்ள குறிப்பிட்ட நபருக்கும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு துளி அளவும் தொடர்பு இல்லை. தைரியம் இருந்தால் அதை சட்டரீதியாக தி.மு.க ஐ.டி விங் இதை நிரூபிக்கட்டும்.

ADVERTISEMENT

அமைச்சர் மீது அபாண்டமான பொய் குற்றச்சாட்டை முன்வைத்து தங்கள் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்ட தி.மு.க ஐ.டி விங்கை சட்ட ரீதியாக எதிர் கொள்வோம். இவ்வாறு தவெக ஐடிவிங் தெரிவித்துள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share