கடந்த 1930-ஆம் இந்தியாவின் சர். சி.வி .ராமன் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார். இவர், தவிர மேலும் 3 இந்தியர்கள் நோபல் பரிசை வென்றுள்ளனர். 1968 ஆம் ஆண்டு மருத்துவத்தில் ஹர்கோவிந்த் கோரானாவும் 1983 ஆம் ஆண்டு சுப்ரமணியன் சந்திரசேகர், 2009 ஆம் ஆண்டு வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் வேதியலிலும் நோபல் பரிசை வென்றனர்.
ஆனால், இவர்கள் மூவரும் இந்தியாவில் பணியாற்றிய போது நோபல் பரிசை பெறவில்லை. இவர்கள் நோபல் பரிசை பெற்ற போது, இந்திய குடியுரிமையாளராகவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியர்கள் நோபல் பரிசு பெற தடுமாற பல காரணங்கள் உள்ளன. இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.6 சதவிகிதம் முதல் 0.7 சதவிகிதம் வரை மட்டும்தான் கல்விக்காகவும் ஆராய்ச்சிக்காவும் செலவழிக்கப்படுகிறது. அதே வேளையில் அமெரிக்கா ,சீனா 2.8 சதவிகிதமும் இஸ்ரேல் 4.3 சதவிகிதமும் தென்கொரியா 4.1 சதவிகிதமும் செலவழிக்கின்றன.
ஆனால், இந்தியாவில் ஆய்வுக்காகவும் ஆராய்ச்சிக்காகவும் செலவிழிக்கப்படும் தொகை வீணாக பார்க்கப்படும் மன நிலை உள்ளது. அதோடு, இந்தியர்களுக்கு வாழ்க்கையில் செட்டில் ஆவதுதான் முதல் இலக்காக இருக்கிறது. ரிஸ்க் எடுப்பதில் இஷ்டம் இல்லாமல் இருப்பதும் ஒரு காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆய்வின் முடிவில் தவறான முடிவுகள் கிடைத்தாலும் அதை பாசிடிவாக எடுத்து கொண்டு அதுவும் ஒரு முடிவுதான் என்கிற எண்ணம் இந்தியர்களுக்கு இல்லையாம். உடனடி ரிசல்ட் அதுவும் தாங்கள் விரும்பிய ரிசல்ட் கிடைக்க வேண்டுமென்றும் இந்தியர்கள் விரும்புவதும் நோபல் பரிசு பெறுவதில் இந்தியர்களுக்கு தடைக்கல்லாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதன் காரணமாகவே இந்தியாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு நோபல் பரிசு கிடைப்பதில் சுணக்கம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
வீரப்பன் நினைவு நாள்… 20 ஆண்டுகளில் மலைப்பகுதிகளில் நடந்த மாற்றம்!
தங்க கம்மலுக்காக பெண்ணின் காதை அறுத்த கும்பல்… துடித்து போன கணவர்!