புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். No income tax up to Rs 12 lakh
இன்று (பிப்ரவரி 1) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இதில் வருமான வரி தொடர்பான அறிவிப்பில்,
தனிநபர் வருமான வரி விலக்கு ரூ. 7 லட்சத்தில் இருந்து 12 லட்சமாக உயர்த்தப்படுகிறது. 12 லட்சம் வரை வருமான வரி செலுத்த தேவையில்லை.
தனிநபர் வருமான அடிப்படையில், No income tax up to Rs 12 lakh
- ரூ.0-4லட்சம் வரை – 0%
ரூ.4- 8 லட்சம் வரை – 5%
ரூ.8-12 லட்சம் வரை – 10 %
ரூ.12- 16 லட்சம் வரை – 15%
ரூ.16-20 லட்சம் வரை- 20%
ரூ.20-24 லட்சம் வரை – 25%
ரூ.24 லட்சம் மற்றும் அதற்கு மேல் – 30% சதவிகிதம் வரி பிடித்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
12 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வரிச் சலுகையில் கூடுதலாக ரூ. 75,000 கழிவு அறிவிக்கப்பட்டுள்ளதால் தனி நபர் வருமானத்தில் 12.75 லட்சம் வரை வருமான வரி செலுத்த தேவையில்லை.
மூத்த குடிமக்களுக்கு ரூ.50,000 வரை வரி பிடித்தம் இல்லை. No income tax up to Rs 12 lakh
வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் 4 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு தனிநபர் வருமான வரி
ரூ.3 லட்சம் வரை வரி இல்லை
ரூ.3 லட்சம் – ரூ.7 லட்சம் வரை – 5%
ரூ.7 லட்சம் – ரூ.10 லட்சம் வரை – 10%
ரூ.10 லட்சம் – ரூ. 12 லட்சம் வரை – 15%
ரூ.12 லட்சம் -ரூ.15 லட்சம் வரை – 20%
ரூ.15 லட்சம் – ரூ.50 லட்சம் வரை – 30%
ரூ.50 லட்சத்திற்கு மேல் – 30%