பலாத்கார வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் சமரசப் பேச்சுவார்த்தை எதுவும் இல்லை; நீதிதான் வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் நடிகை விஜயலட்சுமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். Seeman Vijayalakshmi Supreme Court
தம்மை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலாத்காரம் செய்து ஏமாற்றிவிட்டார் சீமான் என்பது நடிகை விஜயலட்சுமியின் புகார். இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
உச்சநீதிமன்றத்தில் விஜயலட்சுமி- சீமான் வழக்கில் முன்னர் நடைபெற்ற விசாரணையின் போது, “நாங்கள் விஜயலட்சுமியோடு சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” என்று சீமான் தரப்பு கூறியது. இதனை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது. இதனால் இந்த வழக்கும் முடிவுக்கு வந்ததாக கருதப்பட்டது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஜூலை 21-ந் தேதி சீமான் – விஜயலட்சுமி வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் நாகரத்னா,விஸ்வநாதன் அமர்வு விசாரித்தது.
இந்த விசாரணையின் போது விஜயலட்சுமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜதின் பரத்வாஜ், “நாங்கள் சீமானுடன் எவ்வித பேச்சுவார்த்தைக்கும் தயார் இல்லை. எங்களுக்கு நீதி தான் வேண்டும். நாங்கள் பதில் மனுத் தாக்கல் செய்கிறோம்” என தெரிவித்த்தார்.

இதனையடுத்து நடிகை விஜயலட்சுமி தரப்பு பதில் மனுத் தாக்கல் செய்ய 4 வார அவகாசம் கொடுத்துள்ளது உச்சநீதிமன்றம். இதனால் சீமான்- விஜயலட்சுமி வழக்கு மீண்டும் உயிர்பெற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
