நீட் 2026: சிலபஸ் மாறுதா? என்.எம்.சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு… படிக்க வேண்டிய பாடங்கள் என்ன? முழு விவரம்!

Published On:

| By Santhosh Raj Saravanan

NMC releases the complete syllabus for NEET 2026

மருத்துவக் கனவோடு, தற்போதே 10 மற்றும் 11ஆம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் வருங்கால டாக்டர்களுக்காக ஒரு முக்கிய அப்டேட்டை தேசிய மருத்துவ ஆணையம் (NMC) வெளியிட்டுள்ளது.

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நீட் (NEET UG) இளநிலைத் தேர்வுக்கான பாடத்திட்டம் (Syllabus) குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. “கடைசி நேரத்தில் சிலபஸை மாற்றிவிட்டார்கள்” என்று மாணவர்கள் பதறக்கூடாது என்பதற்காகவே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

ADVERTISEMENT

சிலபஸ் நிலவரம் என்ன?

என்.எம்.சி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry) மற்றும் உயிரியல் (Biology) பாடங்களுக்கான தலைப்புகள் தெளிவாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

பெரும்பாலான மாணவர்களுக்கு இருக்கும் சந்தேகம், “பழைய என்.சி.இ.ஆர்.டி (Old NCERT) புத்தகத்தைப் படிக்கவா? அல்லது குறைக்கப்பட்ட புதிய பாடத்திட்டத்தைப் (New NCERT) படிக்கவா?” என்பதுதான்.

என்.எம்.சி வெளியிட்டுள்ள இந்தப் பட்டியல், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவின் (NCERT) புதிய பாடத்திட்டத்தோடு பெரும்பாலும் ஒத்துப்போகிறது.

ADVERTISEMENT

முக்கியத் தலைப்புகள் (High Level Overview):

  • இயற்பியல் (Physics): இயக்கவியல் (Kinematics), ஈர்ப்பியல் (Gravitation), வெப்ப இயக்கவியல் (Thermodynamics), மின்னோட்டவியல், காந்தவியல் மற்றும் ஆப்டிக்ஸ் (Optics) உள்ளிட்ட முக்கியப் பகுதிகள் இடம் பெற்றுள்ளன. எலக்ட்ரானிக் டிவைசஸ் பகுதியில் லாஜிக் கேட்ஸ் (Logic gates) முக்கியத்துவம் பெறுகிறது.
  • வேதியியல் (Chemistry):
  1. Physical Chemistry: அணு அமைப்பு, வெப்ப இயக்கவியல், வேதிப் பிணைப்பு.
  2. Inorganic: தனிமங்களின் வகைப்பாடு (p-block, d-block, f-block elements).
  3. Organic: ஹைட்ரோகார்பன்கள், ஆல்கஹால், பீனால், ஈதர்கள் மற்றும் பயோ-மாலிக்குல்ஸ்.
  • உயிரியல் (Biology): தாவரவியல் & விலங்கியல், செல் கட்டமைப்பு, மரபியல் (Genetics), பரிணாமம் (Evolution), மனித உடல் மற்றும் தாவரங்களின் உடலியல் (Physiology), சூழலியல் (Ecology) ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.

மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்த அறிவிப்பு 2026ல் தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு ஒரு ‘ரோடு மேப்’ (Road Map) போன்றது. எந்தெந்த பாடங்களை நீக்கியிருக்கிறார்கள்? எதற்கெல்லாம் அதிக வெயிட்டேஜ் கொடுக்க வேண்டும்? என்பதை இப்போதே திட்டமிட்டுப் படிக்க இது உதவும்.

சிலபஸ் வந்துடுச்சுன்னு சும்மா பிடிஎஃப் (PDF) டவுன்லோட் பண்ணி வச்சா மட்டும் போதாது. என்.எம்.சி இணையதளத்தில் உள்ள அந்தத் தலைப்புகளை, உங்கள் என்.சி.இ.ஆர்.டி புத்தகத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து ‘டிக்’ செய்து கொள்ளுங்கள். கோச்சிங் சென்டர் மெட்டீரியலை மட்டும் நம்பாமல், மூலப் பாடத்திட்டத்தை (Textbook) கரைத்துக் குடிப்பதுதான் 720/720 வாங்குவதற்கான முதல் படி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share