பிகார் முதல்வர் நிதிஷ்குமார் அம்மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை இன்று (ஜனவரி 28) சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Nitish kumar seeks time to meet Bihar Governor
கடந்த 2022-ஆம் ஆண்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறிய நிதிஷ்குமார், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளுடன் மகா கூட்டணி அமைத்து முதல்வராக பதவி ஏற்றார்.
இதனை தொடர்ந்து பிரதமர் மோடியையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்து வந்த நிதிஷ்குமார், எதிர்க்கட்சி தலைவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அந்தவகையில், இந்தியா கூட்டணி உருவாக நிதிஷ்குமார் முக்கிய பங்கு வகித்தார்.
தொடர்ந்து இந்தியா கூட்டணி சார்பில் நடைபெற்ற மூன்று ஆலோசனை கூட்டங்களிலும் நிதிஷ்குமார் பங்கேற்றார்.
இறுதியாக காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், நிதிஷ்குமார் ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்த நிலையில்,
காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.
அதேபோல, தொகுதி பங்கீட்டிலும் காங்கிரஸ் – ஐக்கிய ஜனதா தளம் இடையே இழுபறி நீடித்து வந்தது.
இந்தநிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவரும், பிகார் மாநில முதல்வருமான நிதிஷ்குமார் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்ப போவதாக தகவல்கள் வருகின்றன.
ஐக்கிய ஜனதா தளம் சட்டமன்ற உறுப்பினர்களுடன் நிதிஷ்குமார் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் செய்தி தொடர்பாளரும், பொதுச்செயலாளரும், நிதிஷ் குமாரின் அரசியல் ஆலோசகருமான கே.சி.தியாகி “பிகார் முதல்வராக நிதிஷ்குமார் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 28) மாலை 4 மணியளவில் பதவியேற்பார்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் தான் பிகார் மாநில ஆளுநரை சந்திக்க நிதிஷ்குமார் நேரம் கேட்டிருப்பதாக ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
பிகார் முதல்வர் பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்துவிட்டு ,மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் கைகோர்த்து முதல்வராக பதவியேற்க உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
6 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்!
தமிழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை: அதிர்ச்சி கொடுத்த அறிக்கை!
Nitish kumar seeks time to meet Bihar Governor