1000 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம்… பழங்குடியினரின் நிலத்தை அபகரித்த நித்தி

Published On:

| By Kavi

Nithyananda snatched tribal land

போலி சாமியாரான நித்யானந்தா பொலிவியாவில் 8 லட்சம் ரூபாய்க்கு குத்தகைக்கு நிலம் வாங்கியிருப்பதாக தகவல்கள் வருகின்றன.  Nithyananda snatched tribal land

பாலியல் வழக்கில் சிக்கி நித்யானந்தா தலைமறைவாக இருக்கிறார்.  தற்போது வரை அவர் எங்கிருக்கிறார் என்று உறுதியாக யாருக்கும் தெரியவில்லை. எனினும்  கைலாசா என்ற பெயரில் ஈகுவாடர் தீவில் அவர் இருந்து வருவதாக கூறப்படுகிறது. 

இந்தசூழலில் தற்போது அவர் தென் அமெரிக்காவில் உள்ள பொலிவியா நாட்டில்  பழங்குடியினரின் நிலத்தை அபகரித்திருக்கிறார்.

கடந்த ஒரு வாரமாக பொலிவியா நாட்டில் இந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. முதலில்,  பொலிவியாவில் உள்ள El Deber என்ற பத்திரிகையைச் சேர்ந்த சில்வானா வின்சென்டி என்ற பத்திரிகையாளர்  இதை அம்பலப்படுத்தியுள்ளார். 

அதைத்தொடர்ந்து பொலிவியா நாட்டு அரசு விசாரணையில் இறங்கியுள்ளது. 

 2024 செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் பொலிவியாவில் உள்ள பழங்குடி சமூகங்களுடன் நில குத்தகை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருக்கிறார் நித்யானந்தா.  பாயர், கயூபா ஆகிய பழங்குடியின சமூகத்தின் தலைவரைச் சந்தித்து இந்த ஒப்பந்தத்தை  போட்டுள்ளார். இந்த நிலம் என்பது பழங்குடிகளுக்காக பொலிவியா அரசு ஒதுக்கீடு செய்த இடமாகும். 

அதாவது அரசு கொடுத்த இடத்தை முறைகேடு செய்து, கல்வி தருகிறோம், மருத்துவ வசதி ஏற்படுத்தி தருகிறோம் என்று பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து 1000 ஆண்டுகளுக்கு 8 லட்சம் ரூபாய் செலுத்தி இந்த ஒப்பந்தத்தை போட்டுள்ளார். 

இதைத்தொடர்ந்து பொலிவியாவுக்கு சென்ற நித்யானந்தா சீடர்கள் அங்கேயே தங்கி ஆன்மீக செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். 

இந்தநிலையில் கடந்த மார்ச் 22ஆம் தேதி இமிகிரேசன் அதிகாரிகள் அங்கு சென்று 20 பெண் சீடர்களை கைது செய்தனர். இதில் 12 பேர் சீனர்கள், 5 முதல் 7 பேர் இந்தியர்கள், மற்றவர்கள் யூரோப்பா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். 

நித்யானந்தா அபகரித்துள்ள இந்த பழங்குடி சமூகத்தினரின் இடம் என்பது,  டெல்லியை காட்டிலும் 2.6 மடங்கு பெரியது. சென்னையை காட்டிலும் 9.1 மடங்கு பெரியது.  அந்த நிலத்தின் பரப்பளவு என்பது 3,900 சதுர கி.மீ ஆகும்.  இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த நிலப்பரப்பு மிகப்பெரிய வெப்பமண்டல மழைக்காடு மற்றும் பல்லுயிர் பன்மமைக்கு பெயர் பெற்ற அமேசான் காட்டுப்பகுதி ஆகும்.  

இதுதான் உலக அளவில் நடந்த மிகப்பெரிய நிலக்கொள்ளை என கூறப்படுகிறது. 

இந்தியாவில் நித்யானந்தா மீது பாலியல் வழக்கு உட்பட பல கிரிமினல் வழக்குகள் உள்ளன.  தேடப்படும் குற்றவாளியான அவரை இண்டர்போல் தேடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.Nithyananda snatched tribal land 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share