ADVERTISEMENT

சூர்யா கூட நடிக்க ஆசை : நித்யா மேனன்

Published On:

| By srinivasan

‘சூர்யா சார எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் கூட படம் நடிக்க ஆசை’ என நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.

கலாட்டா தமிழுக்கு அவர் அளித்த நேர்காணலில் பல கேள்விகளுக்கு மனம் திறந்து பதில் அளித்துள்ளார். அதிலிருந்து ஒரு பகுதி.

ADVERTISEMENT

கேள்வி : நார்மல் லைஃப்ல ஒரு பெண்ணுக்கு அத்துமீறல் நடக்கும் போது எல்லோரும் அமைதியா இருக்காங்க ? ஆனால் ஒரு செலிபிரிட்டிக்கு நடக்கும் போது மட்டும் எல்லோரும் அதை மட்டும் பேச காரணம் என்ன?

ADVERTISEMENT

பப்ளிக் ஒரு நார்மலான பொண்ணு கிட்ட நடக்கற மாதிரி நடிகைகள்கிட்ட நடந்துகிறது இல்லை.  ஒரு மாதிரி பார்ப்பார்கள்.  நடிகைகளை தொட்டு பேசுகிறார்கள், அது தப்பு. ஒரு பிரபலமாக இருக்கும் போது எல்லாரும் இதை பற்றி நிறைய பேசுகிறார்கள். எந்த அளவுக்கு மக்களுக்கு தெரிகிறதோ அந்த அளவுக்கு பேசுகிறார்கள்.

நடிகர் தனுஷுடன் நடிப்பதற்கு முன் கூட்டியே வாய்ப்பு வந்து தள்ளி போய்விட்டதா? இல்லை இதுதான் உங்களுக்கு முதல் படமா?

ADVERTISEMENT

2018னு நினைக்கிறேன். தனுஷ் எனக்கு போன் செய்து நீங்கள் நடிப்பதாக இருந்தால் படம் இயக்கலாமென இருக்கிறேன். இல்லையென்றால் படம் இயக்கவில்லை என்றார். ஆனால் சில காரணங்களால அந்த  படம் பண்ண முடியவில்லை.

ஆடுகளம் படத்துக்கு கூட என்ன கேட்டிருந்தாங்க. அப்போதுதான் என் கெரியர் ஆரம்பமாகியிருந்தது. இதனால் என்னால் அப்படத்தை பண்ண முடியவில்லை. கடைசியாக திருச்சிற்றம்பலம் படத்தின் மூலம் ஒன்று சேர்ந்திருக்கிறோம்

தனுஷ் கிட்ட உங்களுக்கு ரொம்ப பிடித்தது என்ன?

அவர் மரியாதையானவர்.

நீங்கள் இயக்குனரானால் தனுஷ்க்கு என்ன கதாபாத்திரம் கொடுப்பீர்கள் ?

அவர் ஒரு நல்ல நடிகர். அப்படி ஒரு வேளை கதை எழுதினால் பார்க்கலாம்.

நீங்கள் நடித்த படங்களில் இன்னும் கொஞ்சம் நல்லா நடித்திருக்கலாம் என்று நினைத்த படம் என்ன?

அப்படி நிறைய படம் இருக்கிறது.

எந்த நடிகருடன் ஸ்க்ரீனில் நல்ல கெமிஸ்ட்ரி வொர்க்கவுட் ஆகியிருக்கிறது?

துல்கர் தான்.

யாருடன் மறுபடியும் படம் பண்ணனும்னு நினைக்கிறீங்க ?

நிறைய பேரு என் நண்பர்கள் தான்.. அவங்க கூட தான் படம் பண்ண பிடிக்கும். ஆனால் சூர்யா சார ரொம்ப பிடிக்கும். அவர் கூட படம் நடிக்கறது மகிழ்ச்சி.

இவங்க தான் நமக்கான வாழ்க்கை துணைன்னு நீங்கள் எப்படி முடிவு பண்ணுவீங்க?

நான் இன்னும் தீவிரமாக அந்த வேலையில் இறங்காததால், இன்னும் அந்த மாதிரி நபரை கண்டுபிடிக்க முடியவில்லை என பதிலளித்தார்.

  • க.சீனிவாசன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share