நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரானது ஜனவரி 31-ஆம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் ஜனவரி 31-ஆம் தேதி துவங்கியது. தொடர்ந்து பிப்ரவரி 1-ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அப்போது பேசிய அவர், ”2004-14 வரையிலான காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ அரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்கைகள் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.
இந்தநிலையில், கடந்த 2004-14 வரையிலான 10 ஆண்டுகால யுபிஏ அரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்கைகள் குறித்த, வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையில், “2014 இல் பொருளாதாரம் கடும் நெருக்கடியில் இருந்தது. அரசியல் மற்றும் கொள்கை ஸ்திரத்தன்மையுடன் இருந்த என்டிஏ அரசு, யுபிஏ அரசை போல் அல்லாமல், பொருளாதார நலனுக்காக கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. மேலும், பொருளாதாரத்தில் என்டிஏ அரசாங்கம் துணிச்சலான சீர்திருத்தங்களை மேற்கொண்டது.
கடந்த பத்து ஆண்டுகளில், முந்தைய யுபிஏ அரசாங்கம் விட்டுச் சென்ற அனைத்து கடன் சுமைகளையும் என்டிஏ அரசு வெற்றிகரமாக முறியடித்தது. நாட்டின் வளர்ச்சிக்காக யுபிஏ அரசாங்கம் அதிக கடன் வாங்கியது, ஆனால்,அதனை சரியாக ஒருங்கிணைத்து செலவு செய்யவில்லை.
அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை வலுப்படுத்தவும், எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகளை அதிகரிக்க உள்கட்டமைப்பில் முதலீடு செய்யும் வாய்ப்புகளை யுபிஏ அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ளத் தவறியது அம்பலமானது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அமைச்சர்கள் மீதான சூமோட்டோ வழக்குகள் : மீண்டும் தேதி அறிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் என்பது புரளி: பிரேம் ஆனந்த் சின்ஹா
