தமிழ்நாட்டு மக்கள் இந்தி கற்க விரும்பாததால், வட இந்தியர்கள் தமிழ் மொழியை கற்க விரும்பவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ஆம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் துவங்கியது. தொடர்ந்து பிப்ரவரி 1-ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்தநிலையில் நியூஸ் 18 ஆங்கில தொலைக்காட்சிக்கு நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில், “மத்திய அரசு மாநிலங்களுக்கு 50 ஆண்டுகள் வட்டியில்லா கடன் வழங்க தயாராக உள்ளது. இந்த திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள பல மாநில அரசுகள் தயாராக உள்ளன.
தமிழகத்தில் தேசிய கட்சியான காங்கிரஸ், திமுகவின் இந்து விரோத செயல்பாடுகளுக்கு ஆதரவளிக்கிறது. இது மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடியதாக உள்ளது. தமிழ்நாடு அரசு இந்து மதத்திற்கு எதிரானது என்று நான் கூறியது உண்மை. காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் டி.கே.சுரேஷ் தனிநாடு பிரிவினைவாதத்தை தூண்டுகிறார்.
பாஜகவை இந்தி மாநில கட்சி என்று அடையாளப்படுத்துகிறார்கள். தென் மாநிலங்களில் பாஜக வளர்ச்சியடைந்து வருகிறது. பிரதமர் மோடி அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறார்.
குறிப்பாக, ஒவ்வொரு மேடைகளிலும் திருக்குறள், புறநானூறு நூல்களை மேற்கோள் காட்டி பேசுகிறார். தமிழ்நாட்டு மக்கள் இந்தி கற்க விரும்பாததால், வட இந்தியர்கள் தமிழ் மொழியை கற்க விரும்பவில்லை” என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Comments are closed.