பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்

Published On:

| By Kavi

Nirmala Sitharaman presented the budget

2025-26ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 01) தாக்கல் செய்தார். Nirmala Sitharaman presented the budget

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (ஜனவரி 31) குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது.

ADVERTISEMENT

நிதிப் பற்றாக்குறையைக் குறைத்தல், பண வீக்கத்தைக் கட்டுப்படுத்துதல், வேலைவாய்ப்பை உருவாக்குதல் போன்ற சாவல்கள் மத்திய அரசு முன் இருக்கும் நிலையில், நடுத்தர வர்க்கம் முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை பட்ஜெட்டில் என்ன அறிவிப்புகள் வர போகும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறது.

தமிழ்நாட்டுக்கான அறிவிப்பு? Nirmala Sitharaman presented the budget

இந்த நிலையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றம் வருகைத் தந்தார்.

ADVERTISEMENT

முதலில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தார். அப்போது அவருக்கு குடியரசு தலைவர், தகி – சீனி ஊட்டிவிட்டு வாழ்த்து தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில் பட்ஜெட்க்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், காலை 11.01 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார்.

கடந்த ஆண்டு தமிழ்நாடு பெயர் கூட பட்ஜெட்டில் இடம் பெறாத நிலையில், இந்த ஆண்டு சென்னை மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட திட்ட பணி, வெள்ள நிவாரண நிதி, சாலை மேம்பாட்டுக்கான நிதி என என்னென்ன அறிவிப்புகள் வரப்போகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. Nirmala Sitharaman presented the budget

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share