நிர்மலா தேவி தலைமறைவு? : வழக்கு ஒத்திவைப்பு!

Published On:

| By indhu

Nirmala Devi case - Adjournment to April 29

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்த பேராசிரியை நிர்மலா தேவி வழக்கின் மீதான தீர்ப்பை ஒத்திவைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 26) உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக அக்கல்லூரியின் பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது கடந்த 2018-ஆம் ஆண்டு காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு நீதிபதி பகவதி அம்மாள் முன்னிலையில் இருதரப்பு வாதங்கள், விசாரணை நிறைவுபெற்ற நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட மூவரில் முருகன், கருப்பசாமி ஆகியோர் மட்டுமே ஆஜராகினர். ஆனால், நிர்மலா தேவி ஆஜராகவில்லை. நேற்று மாலை முதல் நிர்மலா தேவி தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நிர்மலா தேவி ஆஜராகததால் வழக்கின் மீதான தீர்ப்பை ஏப்ரல் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பகவதியம்மாள் உத்தரவிட்டார்.

இந்து 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

’லோகேஷ், அட்லீ தான் என் வாத்தியார்கள்’ : ஹரியின் பதிலால் ரசிகர்கள் ஆச்சரியம்!

மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு!

”விவிபேட் வழக்கின் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது” : திருமாவளவன்

ஒப்புகைச் சீட்டுகளை முழுமையாக எண்ணக்கோரிய மனுக்கள் தள்ளுபடி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share