நிறம் மாறும் உலகில் ஃபர்ஸ்ட் லுக்: ஸ்பெஷல் என்ன?

Published On:

| By Selvam

இயக்குநர் பாரதிராஜா, நடிகர் நட்டி நட்ராஜ், ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்க அறிமுக இயக்குநர் பிரிட்டோ JB இயக்கத்தில், உணர்வுகளின் குவியலாக உருவாகியுள்ள “நிறம் மாறும் உலகில்” திரைப்படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது.

இயக்குநர் பா.ரஞ்சித், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், லைகா நிர்வாக இயக்குநர் தமிழ்குமரன், இயக்குநர் தேசிங்கு பெரியசாமி, தயாரிப்பாளர் சுரேஷ் கமாட்சி ஆகியோர் தங்கள் சமூக வலை தளம் வழியே இணையத்தில் இப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளனர்.

ADVERTISEMENT

“நான்கு விதமான வாழ்க்கை,  நான்கு  கதைகள்  அதை இணைக்கும் ஒரு புள்ளி,  என மனித வாழ்வின் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளை பேசும் படமாக இப்படம் தயாராகியுள்ளது” என்கிறார் அறிமுக இயக்குநர் பிரிட்டோ JB.

நான்கு  கதைகளும் வேறு வேறு களங்களில் நடக்கிறது மும்பை களம் இங்கு தத்ரூபமாக உருவாக்கப்பட்டு அதில் ஒரு கதை, வேளாங்கண்ணி பின்னணியில் ஒரு கதை, சென்னை ஹவுசிங் போர்ட் பின்னணியில் ஒரு கதை, திருத்தணி  அருகில் ஒரு கிராமத்தில் ஒரு கதை  என பல்வேறு இடங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு கலர் டோனில் படமாக்கப்பட்டுள்ளது. முற்றிலும் புதிதான அனுபவம் தரும் படைப்பாக இப்படம் இருக்கும் என்கிறார் இயக்குநர்.  இன்று வெளியாகியிருக்கும் முதல் பார்வை போஸ்டரில்   இரத்தம் பாயும் கரும்  சிவப்பு நிற பின்னணியில், துப்பாக்கி, ஆட்டோ, கண்ணாடி, ஹவுஸிங் போர்ட் பின்னணி, ஒரு பெண்ணின் நிழல் முகம், என பல்வேறு குறியீடுகளுடன், கதாப்பாத்திரங்களின் வித்தியாசமான தோற்றத்தில் பாத்தவுடனே பதட்டத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

இயக்குநர்பாரதிராஜா, நடிகர்நட்டி, ரியோராஜ், நடன இயக்குநர்சாண்டி என ஒவ்வொருவரின் தோற்றமும் இதுவரையிலும் அவர்களை பார்த்திராத வகையிலான தோற்றத்தில் உள்ளது.

ADVERTISEMENT

இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மீண்டும் தேர்தல் பத்திரமா? – நிர்மலா சீதாராமனை சாடிய மனோ தங்கராஜ்

ஹெல்த் டிப்ஸ்: சொட்டு சொட்டாக சிறுநீர் பிரச்சினைக்கு எளிய தீர்வு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share