திமுகவில் இணைந்த நிலோபர் கபில்

Published On:

| By Kavi

அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் இன்று (பிப்ரவரி 14) முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

 2016-2021 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் நிலோபர் கபில்.  

ADVERTISEMENT

அதிமுகவில் கே.சி. வீரமணி தரப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகவும், தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார் நிலோபர் கபில்.    கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது இவருக்கு சீட் மறுக்கப்பட்டது. 

தொடர்ந்து கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். 

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று(பிப்ரவரி 14) தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டுள்ளார் நிலோபர் கபில்.  

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே நடைபெற்ற திமுக  வடக்கு மண்டல வாக்குச்சாவடி  முகவர்கள் பயிற்சி மாநாட்டில், தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அவர் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.

ADVERTISEMENT

அப்போது முதல்வருக்கு பூங்கொத்து புத்தகம்,  சால்வை ஆகியவற்றை பரிசாக கொடுத்தார். 

தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், நிலோபர் கபிலையும் வரவேற்று உரையாற்றினார்.

நிலோபர் கபில், திமுகவில் இணைந்ததன் மூலம் வாண்டியம்பாடி, ஜோலார்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திமுகவின் செல்வாக்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share