நீலகிரி மாவட்ட பதிவெண் (TN43) வாகனங்கள் உதகை செல்ல இ-பாஸ் தேவையில்லை என்று உதகை ஆர்டிஓ தெரிவித்துள்ளார்.
07.05.2024 முதல் ஊட்டி, கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வாகனங்களும் “இ” பாஸ் பெற்றே வரவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் ஏப்ரல் 29ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்நிலையில் இ பாஸ் வழங்குவதற்கு நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்நிலையில் உதகைமண்டல வட்டார போக்குவரத்து அலுவலர் ஓர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில், “நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் நீலகிரி மாவட்ட பதிவு எண் “TN 43″ பெற்றிருந்தால் அந்த வாகனங்களுக்கு “e” பாஸ் தேவையில்லை.
வெளிமாவட்டங்களில் இருந்து வாகனங்களை வாங்கி நீலகிரி மாவட்டத்தில் உரிமை மாற்றம் செய்திருக்கும் பொதுமக்கள் வாகனத்தின் அசல் வாகன பதிவுச்சான்று, காப்புச்சான்று மற்றும் நடப்பிலுள்ள புகைச்சான்று ஆகியவற்றுடன், உதகை வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தை அணுகினால், ஆவணங்களை சரிபார்த்து உதகை வட்டடாரப்போக்குவரத்து அலுவலகத்தால் “e” பாஸ் வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
டெஸ்டில் சறுக்கிய இந்தியா… டி20, ஒரு நாள் போட்டிகளில் ஸ்டேட்டஸ் என்ன?
ஓடி ஒளிய வேண்டாம்… : அமேதியில் ராகுல் போட்டியிடாததை கிண்டல் செய்த மோடி