திருமண பந்தத்தில் ஆதி – நிக்கி கல்ராணி

Published On:

| By Test User

மீண்டும் ‘குஷி’ : தலைப்பு வைத்தது சரியா?

நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணியின் திருமணம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

MK Stalin Alagiri

யாகாவராயினும் நாகாக்க,மரகத நாணயம் ஆகிய படங்களில் ஆதியும், நிக்கி கல்ராணியும் ஜோடியாக நடித்தபோது இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டது. கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் கடந்த மார்ச் மாதம் நிச்சயம் செய்து கொண்டனர். நேற்று (மே 19) இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ADVERTISEMENT

கடந்த இரண்டு நாட்களாக மெஹந்தி, சங்கீத், ஹல்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடிகை நிக்கி கல்ராணியின் இல்லத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்து முறைப்படி சென்னையில் உள்ள திருமண மண்டபத்தில் குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ADVERTISEMENT

மணமகன் ஆதி தங்க நிற குர்த்தா உடையிலும், மணமகள் நிக்கி கல்ராணி தங்கம் மற்றும் பச்சை நிறம் கலந்த உடையில் தோற்றமளித்தார்கள். முன்னதாக நடந்த ஹல்தி விழாவில் நடிகர்கள் நானி, சந்திப் கிஷன், ஆர்யா, சாயிஷா, சிரிஷ் உள்ளிட்ட சில சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். இவர்களின் திருமண வரவேற்பில் திரைப்பட நட்சத்திரங்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

-அம்பலவாணன்

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share