நெல்லை, கோவை, மதுரை உள்பட 20க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று (பிப்ரவரி 10) சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை கார் வெடிப்பு வழக்கில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில் இன்று காலை 6 மணி முதல் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனையானது கோவை, சென்னை, கோவை, நெல்லை, மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்து வருகிறது.
கோவை உக்கடம் அல் அமீன் காலனி 2வது வீதியில் உள்ள அபிபுல் ரகுமான், நெல்லை ஏர்வாடியில் பழனிபாபா அரசியல் அமைப்பை சேர்ந்த பக்ரூதின் அலி ஆகியோரது வீட்டிலும், மதுரை காஜிமாத் தெரு என 20 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நிதி வசூல், மூளைசலைவை செய்தல், உபகரணங்கள் கொடுத்து உதவுதல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் இந்த சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
