இடைத்தேர்தலுக்கு சற்றும் குறைவில்லாத வகையில், நெய்வேலி என்எல்சி தேர்தல் களத்தில் பணம் புழங்குகிறது என்று என்எல்சி தேர்தலா? இடைத்தேர்தலா? – ஸ்டாலின் அனுப்பிய அமைச்சர்கள்! என்ற தலைப்பில் பிப்ரவரி 22-ஆம் தேதி மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். neyveli nlc election voting
இந்தநிலையில், இன்று அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கிய தொழிற்சங்க தேர்தல் வாக்குப்பதிவானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நெய்வேலி என்எல்சி-யில் சுமார் 12,000 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, சிபிஎம், சிபிஐ, விசிக, பாமக, தவெக உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. neyveli nlc election voting
இருப்பினும், சிஐடியு, திராவிட தொழிலாளர் சங்கம், அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம், மஸ்தூர் சங்கம், பாட்டாளி மக்கள் சங்கம், தொமுச ஆகிய ஆறு சங்கங்கள் மட்டுமே தேர்தல் களத்தில் உள்ளன.
திமுக கூட்டணியில் சிபிஎம் தவிர்த்து காங்கிரஸ், விசிக, தவாக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொமுசவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. கூட்டணியில் இருந்தாலும் அதிமுகவின் அ தொ மு ச வும், பாஜகவின் மஸ்தூர் சங்கமும் இந்த தேர்தலில் தனித்து களம் காண்கின்றனர்.
திமுக தரப்பில் அமைச்சர்கள் சி.வெ.கணேசன், எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், எம்எல்ஏ சபா ராஜேந்திரன், அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், செம்மலை, எம்.சி.சம்பத், சிபிஎம் தரப்பில் சு.வெங்கடேசன் எம்.பி, மாவட்ட செயலாளர்கள் என அனைவரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். neyveli nlc election voting
இந்த தேர்தலில் வெற்றி பெற தொமுச, அதொமுச, சிஐடியு ஆகிய மூன்று தொழிற்சங்கங்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது.
இந்தநிலையில், என்எல்சி தொழிற்சங்க வாக்குப்பதிவானது இன்று அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6.00 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைகிறது. மொத்தம் 6,800 வாக்காளர்கள் உள்ளனர். வாக்குப்பதிவானது 9 இடங்களில் நடைபெறுகிறது.
சிங்கிள் மெஜாரிட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் 51 சதவிகிதம் வாக்குகள் பெற வேண்டும். ஒருவேளை 51 சதவிதம் வாக்குகள் பெற முடியாமல் போனால், அடுத்த இடத்தில் வரக்கூடிய சங்கங்கள் அங்கீகரிக்கப்படும்.
ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் இன்று அதிகாலை வரை பணப்பட்டுவாடா நடந்ததாக சொல்கிறார்கள் தொழிலாளர்கள் வட்டாரத்தில்.
இதுதொடர்பாக தொழிலாளர்களிடம் நாம் விசாரித்தபோது, “ஏப்ரல் 20,21 தேதிகளில் பாமக தொழிற்சங்கம் சார்பில் உறுப்பினர்களுக்கு 1,000 ரூபாய் பணம் விநியோகிக்கப்பட்டது. அதொமுச உறுப்பினர்களிடம் ‘நீங்க எந்த கட்சியில வேணும்லானும் இருங்க… சாதிக்காக நம்ம சங்கத்துக்கு ஓட்டு போட்ருக்காங்க’ என்று அதொமுசவில் உள்ள சில வன்னியர் உறுப்பினர்களுக்கும் பாமக தொழிற்சங்கம் பணம் கொடுத்துள்ளது.

ஏப்ரல் 21-ஆம் தேதி அதொமுச தரப்பில் வாக்காளர்களுக்கு முதற்கட்டமாக 2000 ரூபாயும், 23-ஆம் தேதி இரண்டாவது கட்டமாக 1,000 ரூபாய் என மொத்தம் 3000 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஏப்ரல் 23-ஆம் தேதி இரவு தொமுச வாக்காளர்களுக்கு 3,000 ரூபாய் பணம் பட்டுவாடா செய்தது.
எதிர்க்கட்சியான அதொமுச 3,000 ரூபாய், நாமும் 3,000 ரூபாய் கொடுத்திருக்கோம். இதனால் வாக்குகள் குறையும். அதனால் இன்னும் கூடுதலாக கொடுத்தால் சரியாக இருக்கும் என்று ஓட்டுப்பதிவு நடைபெறுவதற்கு முன்பாகவே இன்று அதிகாலையில் கூடுதலாக 500 என மொத்தமாக 3,500 ரூபாய் பணம் கொடுத்திருக்கிறார்கள். சிஐடியு மட்டும் பணம் கொடுக்கவில்லை” என்கிறார்கள்.
தொமுச நிர்வாகிகள் தரப்பில், “எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அதொமுச 3,000 ரூபாய் கொடுத்ததால் தான் தொமுச 500 ரூபாய் கூடுதலாக கொடுக்கிறார்கள். ஆளும் கட்சியான தொமுச கண்ணை மூடிக்கொண்டி ஓட்டுக்கு 5,000 கொடுத்திருந்தால் தொமுச சிங்கிள் மெஜாரிட்டியில வந்திருப்போம். அந்த வாய்ப்பை இழந்துவிட்டோம்” என்கிறார்கள். neyveli nlc election voting
