தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்கு வங்ககடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை வலுவிழந்து தற்போது தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்ககடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது.
இது தொடர்ந்து மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து அடுத்து வரும் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும்.

இதன்காரணமாக் அடுத்து வரும் இரண்டு தினங்களுக்கு வட தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரையில் தமிழக கடற்கரையோர பகுதிகள், மன்னார் வளைகுடா, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 40-45 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னை மற்றும் புற நகரைப் பொறுத்தவரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வடகிழக்கு பருவமழை பொறுத்தவரையில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அக்டோபர் 1 முதல் நவம்பர் 22 வரையிலான காலகட்டத்தில் பதிவான மழையின் அளவு,
33 செ.மீ. இந்த காலகட்டத்தில் இயல்பு அளவு 31 செ.மீ. இது இயல்பை விட 6 சதவிகிதம் அதிகமாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செல்வம்
“ஆண்களுக்கு இட ஒதுக்கீடு கேட்கும் காலம் வரலாம்”: ராணி மேரி கல்லூரியில் ஸ்டாலின்
