UIDAI தரப்பில் இருந்து ஒரு அறிவிப்பு வெளியாகி இருந்தது. அந்த அறிவிப்பில் டிசம்பர் 14ஆம் தேதிக்குள் ஆதார் தொடர்பான அப்டேட்களை செய்ய வேண்டும் இல்லையென்றால் அதன் பின் செய்யப்படும் அப்டேட்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.
ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பாலினம், தொலைபேசி எண், கைரேகை மற்றும் கருவிழி போன்ற விவரங்களை அப்டேட் செய்வது மிக முக்கியமான ஒன்றாகும். இவற்றை இந்த 10 ஆண்டுகளில் அப்டேட் செய்யாதவர்கள் தற்போது அப்டேட் செய்ய வேண்டும் என்று UIDAI -யும் அறிவுறுத்தி வருகிறது.
இவ்வாறு அவ்வப்போது அப்டேட் செய்து வருவதால் ஆன்லைன் மோசடிகளை கட்டுபடுத்த முடியும் என்றும், மக்களின் விவரங்கள் துல்லியமாக இருக்கும் என்றும் UIDAI தெரிவித்துள்ளது.
தற்போது டிசம்பர் 11ஆம் தேதி UIDAI வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் ஆதார் அப்டேட் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. டிசம்பர் 15 முதல் மார்ச் 14 என மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் My Aadhar Portal வழியாக அப்டேட் செய்யும் போது இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம். ஆதார் மையங்களில் விவரங்களை அப்டேட் செய்யும் போது ரூ.25 கட்டணமாக செலுத்த வேண்டும்.
-பவித்ரா பலராமன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நாடாளுமன்ற தாக்குதல் : அடிபடும் பாஜக எம்.பி பெயர் – யார் இந்த பிரதாப் சிம்ஹா?










