தமிழகத்தில் 19 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்திருந்த நிலையில், தற்போது சூறாவளிக் காற்றுடன் சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்து மக்களை குளிர்வித்து வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த சில காலமாகவே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை, நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி உட்பட மேற்குத் தொடர்ச்சி மாவட்டங்களை ஓட்டிய பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.
எனினும் சென்னை மற்றும் புறநகரில் கடந்த ஒரு வாரமாகப் பெரியளவில் மழை இல்லை. இந்த நிலையில் சென்னை உட்பட 19 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் இன்று மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் தெரிவித்திருந்தது.
அதன்படி சென்னையில் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், திருவல்லிக்கேணி, ஆவடி, மீனம்பாக்கம், பல்லாவரம், தாம்பரம் உட்பட நகரின் பல்வேறு இடங்களில் இன்று மாலையில் திடீரென சூறாவளி காத்து வீசியது. தொடர்ந்து லேசான மழையும் பெய்து வருகிறது.
இதற்கிடையே அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுவையில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஒரே வீட்டில் தாய், மகன், பேரன் கொலை… இருவர் கைது : நடந்தது என்ன?