ADVERTISEMENT

கடும் எதிர்ப்பால் பணிந்தது மத்திய அரசு: இந்திய மல்யுத்த சம்மேளனத்தை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை!

Published On:

| By Selvam

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய மல்யுத்த சம்மேளனத்தை சஸ்பெண்ட் செய்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் இன்று (டிசம்பர் 24) உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உத்தரபிரதேச மாநிலம் கோண்டா நகரில் ஜூனியர் தேசிய போட்டிகள் இந்த ஆண்டு இறுதிக்குள்  நடைபெறும் என்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மல்யுத்த சம்மேளன தலைவர் சஞ்சய் குமார் சிங் அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்த மல்யுத்த போட்டிகளுக்கான அறிவிப்பு என்பது அவசரமானது மற்றும் உரிய நடைமுறையை பின்பற்றவில்லை. மேலும், ஏற்கனவே உள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை முற்றிலும் புறக்கணித்துள்ளது.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மல்யுத்த சம்மேளன குழு முன்னாள் அலுவலர்களின் முழு கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிகிறது.

ADVERTISEMENT

இதன் காரணமாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய மல்யுத்த சம்மேளனத்தை மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிடுகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரிஜ் பூஷன் சரண் சிங் ஆதரவாளரான சஞ்சய் சிங் கடந்த வாரம் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்கு மல்யுத்த வீரர்கள் சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் புனியா, வீரேந்திர் சிங் யாதவ் உள்ளிட்டோர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். சாக்‌ஷி மாலிக், மல்யுத்த போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பஜ்ரங் புனியா பத்மஸ்ரீ, கேல் ரத்னா, அர்ஜூனா விருதுகளை திருப்பி அளிப்பதாக தெரிவித்தார்.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக சஞ்சய் சிங் தேர்தெடுக்கப்பட்டதற்கு வீரரகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் மத்திய விளையாட்டு அமைச்சகம் சம்மேளனத்தை சஸ்பெண்ட் செய்துள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பெரியார் நினைவு நாள்: தலைவர்கள் மரியாதை!

கொடைக்கானலில் பனிப்பொழிவு:  மலர் செடிகளைப் பாதுகாக்க நிழல் வலை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share