நடப்பு ஐபிஎல் தொடரில் போட்டிகளில் சுவாரசியத்தை ஏற்படுத்தும் விதமாக சில புதிய விதிகளுக்கு பிசிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது. new rules apply for ipl season 2025
இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18வது சீசன் நாளை (மார்ச் 22) தொடங்குகிறது. கொல்கத்தா ஈடன் கார்டனில் நடக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்திக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
இந்த நிலையில் நேற்று ஐபிஎல்லில் பங்கேற்கும் 10 அணிகளின் கேப்டன்களுடன் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) மும்பையில் ஆலோசனை நடத்தியது. அந்த கூட்டத்தில், நடப்புத் தொடரில் சில புதிய விதிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
என்னென்ன விதிகள்? new rules apply for ipl season 2025
பந்தில் எச்சில் தடவ அனுமதி!
🔴கிரிக்கெட் பந்தை ஸ்விங் செய்ய எச்சில் தடவுவது ஒரு வழக்கம். கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் கிரிக்கெட் பந்து மீது எச்சில் தடவுவதற்கு கடந்த 2020ம் ஆண்டு ஐசிசி தடை விதித்தது. 2022ம் ஆண்டில் இந்த தடையை ஐசிசி நிர்ந்தரமாக்கியது. இந்த நிலையில் இத்தடையை நடப்பு ஐபிஎல் தொடரில் நீக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதையேற்று கிரிக்கெட் பந்தை பளபளப்பாக்கவும், ஸ்விங் செய்யவும் பவுலர்கள் எச்சில் பயன்படுத்தலாம் என பிசிசிஐ அனுமதி அளித்து உள்ளது.
ஒரு போட்டியில் 3 புதிய பந்துகள்!
🔴இரவில் நடக்கும் போட்டியில் பனியின் தாக்கம் காரணமாக பவுலர்கள் பந்தை கிரிப் செய்ய முடியாதது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைகிறது. இதனால் ரன்கள் அதிகமாக செல்கிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக 2வது இன்னிங்சில் 2 புதிய பந்துகளை பயன்படுத்த விதி கொண்டு வரப்படுகிறது. 2வது இன்னிங்ஸில் 10 ஓவர்கள் முடிந்ததும் 2வது புதிய பந்து பயன்பாட்டுக்கு தயாராக இருக்கும். அந்தப் பந்தை கொடுக்குமாறு பவுலிங் செய்யும் அணியின் கேப்டன் நடுவரிடம் அனுமதி கோரலாம். அப்போது பனியின் தாக்கம், ஈரப்பதத்தை நடுவர் சோதித்த பின்பே 11வது ஓவருக்கு பிறகு 2வது புதிய பந்தை பௌலிங் செய்யும் அணிக்கு நடுவர் வழங்குவார். அதே வேளையில் பிற்பகல் போட்டிகளில் (மாலை 3.30 மணி போட்டி) இரண்டாவது பந்து விதி இடம்பெறாது.
இனி நோ பாலுக்கு டிஆர்எஸ்!
🔴பேட்ஸ்மேன்களின் தலைக்கு பவுலர்கள் பவுன்சர் வீசினால் நோ பால் கொடுக்கப்படும். சில நேரம், பந்து தலையில் உயரத்திற்கு செல்லும்போது கூட நடுவர்கள் நோ பால் வழங்குவது உண்டு. இந்த சர்ச்சையை போக்க, பவுன்ஸ் நோ பாலுக்கு டிஆர்எஸ் எடுக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதேபோல், அவுட் சைட் ஆப் ஸ்டம்ப்புக்கும் டிஆஎஸ் எடுக்க முடியும்.
மெதுவாக வீசினால் புள்ளிகள் குறைக்கப்படும்!
🔴ஐபிஎல் போட்டிகளில் பவுலர்கள் மெதுவாக பந்துவீசுவதால் கேப்டன்களுக்கு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படுகிறது. இந்த விதிமுறையை பிசிசிஐ தற்போது நீக்கி, மெதுவாக பந்து வீசினால் புள்ளிப்பட்டியலில் புள்ளிகள் குறைக்கப்படும் என அறிவித்துள்ளது.