மயிலாடுதுறையில் 85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ரயில் மேம்பாலம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். New railway flyover worth Rs 85 crore
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் ரூ.432 கோடியே 92 லட்சம் மதிப்பீட்டிலான 47 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 12 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 54,461 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
அப்போது மயிலாடுதுறை மாவட்டத்துக்கு புதிய 8 அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதாவது, மயிலாடுதுறை நீடூரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ரூ. 85 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.
சுதந்திர போராட்ட தியாகி சாமி நாகப்பனுக்கு உருவசிலை நிறுவப்படும்.
தாழம்பேட்டை, வெண்ணக்கோவில் கிராமங்களில் கடற்கரையோர கட்டமைப்பு வசதிகள் ரூ.8 கோடியில் மேம்படுத்தப்படும்.
குத்தாலம் வாய்க்கால் ரூ.7 கோடி செலவில் புனரமைக்கப்படும்.
மங்கநல்லூர் – ஆடுதுறை சாலை ரூ.45 கோடியில் 2 வழி சாலையாக மேம்படுத்தப்படும்.
சீர்காழி நகராட்சியில் உள்ள தேர்கீழ வீதி உள்ளிட்ட 4 இடங்களில் மழைநீர் வடிகாலுடன் கூடிய சாலை மேம்பாட்டு பணிகள் ரூ.8 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
சீர்காழிக்கு ரூ.5 கோடி செலவில் நகராட்சி அலுவலகம் கட்டி தரப்படும்.
பூம்புகார் துறைமுகத்தில் ரூ.4 கோடியில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார். New railway flyover worth Rs 85 crore
