“இந்தியா முன் புதிய வாய்ப்புகள் குவிகின்றன” – பிரதமர் மோடி

Published On:

| By Kalai

நமது அரசியலமைப்பை நமக்கு வழங்கியவர்களின் தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றுவோம் என்று பிரதமர் மோடி அரசியல் சாசன தினத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1949 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அரசியலமைப்பு சபை ஏற்றுக்கொண்டதன் நினைவாக, 2015 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 26 அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.

ADVERTISEMENT

இந்தியா அரசியலமைப்பு தினத்தை சம்விதன் திவாஸ் தினமாக கொண்டாடி வரும் நிலையில், பல மூத்த அரசியல்வாதிகள் சமூக ஊடகங்களில் வாழ்த்துக்களை தெரிவித்தும், அரசியலமைப்பை உருவாக்குவதில் ஈடுபட்ட அனைவருக்கும் அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.

இந்தநிலையில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற அரசியலமைப்பு தின விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் போது இ-கோர்ட் திட்டத்தின் கீழ் பல்வேறு புதிய திட்டங்களை மோடி தொடங்கி வைத்தார்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் பேசிய அவர், “அரசியலமைப்பின் முகப்புரையில் உள்ள மக்களாகிய நாங்கள், இந்தியாவை ஜனநாயகத்தின் தாயாக மாற்றிய அர்ப்பணிப்பு, உறுதிமொழி மற்றும் நம்பிக்கையாக இருக்கிறது.

தனிநபர்களாக இருந்தாலும் சரி, நிறுவனங்களாக இருந்தாலும் சரி, நமது கடமைகளே நமது முதல் முன்னுரிமை. இன்று, உலகம் நம்மை பெரும் எதிர்பார்ப்புடன் பார்க்கிறது.

ADVERTISEMENT

இன்று இந்த நாடு முழு திறனுடன் முன்னேறி வருகிறது. அதன் அனைத்து பன்முகத்தன்மையிலும் பெருமை கொள்கிறது.

இதற்குப் பின்னால் உள்ள நமது மிகப்பெரிய பலம் நமது அரசியலமைப்பு. சாமானியர்களுக்கான சட்டங்கள் எளிமையாக்கப்பட்டு வருகின்றன” என்றார்.

இந்தியாவுக்கு முன் புதிய வாய்ப்புகள் வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர், “எல்லா தடைகளையும் தாண்டி நாடு முன்னேறிக்கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில், ஜி20 தலைவர் பதவியை இந்தியா பெறும். இது மிகப்பெரிய வாய்ப்பு.  

டீம் இந்தியா என்ற முறையில், நாம் அனைவரும் இந்தியாவின் மதிப்பை உலகத்தின் முன் உயர்த்த வேண்டும். இது நமது கூட்டுக் கடமை” என்று  உரையாற்றினார்.

கலை.ரா

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி-சி 54!

பாஜக கிளப்பிய பாகிஸ்தான் ஜிந்தாபாத்: பதிலடி கொடுத்த காங்கிரஸ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share