தந்தை அல்லது கார்டியன் ஒப்புதல் இல்லாமல் பெண்கள் திருமணம் செய்யும் வகையில் அமீரகத்தில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.marriage, rules in UAE
அமீரகத்தில் பெண்கள் இது நாள் வரை பெற்றோர் அல்லது கார்டியன் ஒப்புதல் இல்லாமல் தாங்கள் விரும்பியவரை திருமணம் முடிக்க முடியாத நிலை இருந்தது. இந்த நாட்டில் இரு பாலாருக்கும் திருமண வயது 18 ஆக இருக்கிறது. தற்போது, அமீரகத்தில் பெண்கள் தாங்கள் விரும்பும் ஆணை திருமணம் செய்யும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது. marriage, rules in UAE
அதன்படி, பெற்றோர் அல்லது கார்டியன் திருமணத்தை எதிர்த்தால் பெண்கள் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வழி வகை செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டை சேர்ந்த முஸ்லீம் பெண்ணாக இருந்தாலும் அமீரகத்தில் வசித்தால் இந்த சட்டம் அவர்களுக்கும் பொருந்தும்.marriage, rules in UAE
திருமணம் செய்து கொள்ளும் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான வயது வித்தியாசம் 30க்கும் மேல் இருந்தால், நீதிமன்றம் அனுமதித்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
நிச்சயதார்த்தம் என்பது பெண்ணின் முழு சம்மதத்துடன் தான் நடைபெற வேண்டும் அதே வேளையில், நிச்சயதார்த்தம் செய்துவிட்டாலே திருமணம் முடிந்து விட்டதாக நினைக்க கூடாது. பரிசுப் பொருட்கள் தர வேண்டும் என்ற கட்டுப்பாட்டின் கீழ் திருமணம் உறுதி செய்யப்பட்டு ரத்தானால் அந்த பரிசை திருப்பி தந்துவிட வேண்டும். இது 5.9 லட்சம் ரூபாய் மதிப்புக்கு மேல் கொண்ட பொருட்களுக்கு மேல் மட்டுமே பொருந்தும். New marriage, rules in UAE
ஏற்கனவே , திருமணமாகி முதல் கணவருக்கு குழந்தைகள் இருந்தால், அந்த குழந்தைகளை மனமொத்த சம்மதத்தின் பேரில் புதிய வாழ்க்கையில் வைத்து கொள்ள உரிமை உண்டு. இப்படி பல சட்ட திருத்தங்கள் அமீரகத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய சட்டம் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. New marriage, rules in UAE