வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

Published On:

| By Kavi

New low pressure area in the Bay of Bengal

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. New low pressure area in the Bay of Bengal

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.  இந்தநிலையில்  தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று (ஏப்ரல் 7) ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்று அறிவித்தது. 

36 மணி நேரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்த நிலையில்  முன்கூட்டியே உருவாகியிருப்பதாக  கூறியுள்ளது.  

இன்று (ஏப்ரல் 7)  வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  “தென்கிழக்கு வங்கக்கடலை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவி வந்தது. தற்போது அது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி உள்ளது.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை  அடையும். அதற்கடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளை அடையும்.  

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வை பொறுத்து மழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டில் மிதமான மழை நீடிக்கும். தென்மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளது. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் . அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.  New low pressure area in the Bay of Bengal

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share