நகை கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி கொண்டுவரும் கட்டுப்பாடுகள் மாநில கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது என்று அமைச்சர் பெரியக்கருப்பன் கூறியுள்ளார். New Jewelry Loan Regulations
தலைமை செயலகத்தில் இன்று (மே 29) கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில், துறை அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. சட்டப்பேரவையில் துறை சார்பாக அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரியக்கருப்பன், நகைக்கடன் தொடர்பான ரிசர்வ் வங்கியின் புதிய வரைவு விதிமுறைகள் குறித்து பேசினார்.
அப்போது அவர், “ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளால் ஏழை எளிய மக்கள் நடுத்தர வர்கத்தினருக்கு பாதிப்புதான். ஆனால் மாநில கூட்டுறவு வங்கிகளை பாதிக்காது. விலை மதிப்பில் மார்கெட் நிலவரத்தை பொறுத்து 75 சதவிகிதம் தான் கடன் கொடுக்கப்படும் என்று ஆர்.பி.ஐ சொல்கிறது. அந்தளவுதான் நாம் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். தொடக்க வேளாண்மை கடன் வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் வருவது இல்லை, அதனால் ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய வரைவு விதிகள் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது
ஆனால் ஏழை எளிய மக்கள் அவசர தேவைக்காக பாட்டன் பூட்டன் வாங்கிய நகையை வைத்து பணம் வாங்க சென்றால் அதற்கான ரசீது கேட்டால் எப்படி கொடுக்க முடியும். அதனால் தான் முதல்வர் ஸ்டாலின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார்”என்று கூறினார். New Jewelry Loan RegulationsNew Jewelry Loan Regulations
