2024 முதல் மூன்று புதிய அம்சங்களுடன் கூகுள் மேப் செயலி!

Published On:

| By Kavi

New Google Maps updates

2024-ம் ஆண்டின் தொடக்கத்தில் கூகுள் மேப் செயலியில் மூன்று புதிய அம்சங்கள் அறிமுகம் செய்ய உள்ளது. இதன்மூலம் கூகுள் மேப் செயலி பயன்பாட்டில் துல்லியம் மற்றும் இலகுத்தன்மை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் அனைவரும் கூகுள் மேப் செயலியை பயன்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது. தற்போது கூகுள் மேப் செயலியில் அறிமுகம் செய்யப்படவுள்ள புதிய அம்சங்கள், அதன் பயன்பாட்டை மேலும் எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றங்கள் 2024-ம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகம் செய்ய கூகுள் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் மட்டும் கூகுள் மேப் செயலியில் நாள்தோறும் சராசரியாக 50 மில்லியன் இலக்குகள் உள்ளீடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் சராசரியாக 2.5 மில்லியன் கிலோமீட்டருக்கான இலக்குகள் காண்பிக்கப்படுகின்றன.

இந்த நிலையில் மேப் லென்ஸ் மேம்பாடு (Lense Integration), முகவரி விளக்கம் (Address descriptors), நடைப்பயண வழி காட்டி (Live view walking navigation) ஆகிய மூன்று அம்சங்களை அறிமுகம் செய்யவுள்ளது. கூகுள் மேப் பயன்படுத்தி நடக்கும் பயனர்களுக்கு நடைப்பயண வழிகாட்டி அம்சம் துல்லியமான இலக்குகளைக் காண்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: குளிர்காலத்தில் கூந்தலைப் பராமரிப்பது எப்படி?

கிச்சன் கீர்த்தனா: அமெரிக்கன் சாப்ஸி

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

பொன்முடிக்கு தண்டனை: அலர்ட் நிலையில் போலீஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share