1997 ஆம் ஆண்டு வெளியான அரவிந்தன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் ஷங்கர் ராஜா. அப்போது அவரின் வயது 16.
அப்போது தொடங்கிய அவரது சினிமா பயணம், இன்று கிட்டத்தட்ட 170 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து இந்தியாவின் மிக முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருகிறார்.
சில ஆண்டுகளாக இவரது இசையில் வெளியான பாடல்கள் மற்றும் படங்கள் பெரிய ஹிட்டாகவில்லை என்பதால் யுவன் ரசிகர்கள் கொஞ்சம் சோகத்தில் இருந்தனர்.
ஆனால் சமீபத்தில் யுவன் இசையில் வெளியான விஜய்யின் THE GREATEST OF ALL TIME படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விசில் போடு பாடல் மற்றும் கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் படத்தின் பாடல்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டது.
ஒரு இசையமைப்பாளராக மட்டுமின்றி ஒரு தயாரிப்பாளராகவும் யுவன் ஷங்கர் ராஜா நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து தயாரித்து வருகிறார்.
இவரது தயாரிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் வெளியான மாமனிதன், பொன் ஒன்று கண்டேன் ஆகிய திரைப்படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில் அடுத்ததாக ஒரு புதிய படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்க இருக்கிறாராம்.
இந்த படத்தில் தொலைக்காட்சி பிரபலம் ரியோ ராஜ் கதாநாயகனாக நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ரியோ ராஜ் நடிப்பில் வெளியான ஜோ திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. ஜோ படத்தில் ரியோ ராஜுக்கு ஜோடியாக நடித்த மலையாள நடிகை மாளவிகா மனோஜ் தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோயின் ஆக மாறிவிட்டார்.
இதனைத் தொடர்ந்து தற்போது யுவன் தயாரிக்க உள்ள திரைப்படத்தில் ரியோ ராஜுக்கு ஜோடியாக மீண்டும் மாளவிகா மனோஜ் நடிக்க இருப்பதாகவும், இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஸ்வினீத் என்பவர் இயக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
கூடிய விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: அடிக்கடி மலச்சிக்கலைச் சந்திப்பவரா நீங்கள்?
கிச்சன் கீர்த்தனா : கேரட் மில்க் ஷேக்!
நவரச நாயகனின் “அரிச்சந்திரா”: ஆகோஷ் டீமின் மேஜிக்கல் மியூசிக்!
உபா வழக்கு: நியூஸ் கிளிக் நிறுவனர் விடுதலை… உச்சநீதிமன்றம் தீர்ப்பு!