ADVERTISEMENT

மீண்டும் கொரோனா அலை:  சிங்கப்பூரில் 25,900 பேர் பாதிப்பு!

Published On:

| By Kavi

சிங்கப்பூரில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 5-ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து 25,900 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று பின்னர் உலகம் முழுவதும் பரவியது. இதனால் உலக நாடுகள் பலவும் பெரும் பாதிப்பை சந்தித்தன.

ADVERTISEMENT

தற்போது பல நாடுகளில் இயல்புநிலை திரும்பிய நிலையில் சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதுபற்றி சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

அதில், “நாட்டில் கொரோனா புதிய அலை வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகிறது.

இந்த அலை அடுத்த 2 முதல் 4 வாரங்களில் ஜூன் இறுதியை ஒட்டி உச்சத்தைத் தொட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இப்போது நாம் புதிய அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம்.

ADVERTISEMENT

வரவிருக்கும் விஷயங்களுக்கு சுகாதார அமைப்பு நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு பொதுமக்கள் முகமூடியை அணிய வேண்டும்” என்றார்.

மேலும், சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலில், கடந்த வாரத்தில் 13,700 தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்ட நிலையில் (மே 5 முதல் 11 வரை) தற்போது 25,900 பாதிப்புகள் பதிவாகியுள்ளது. இதில் தினமும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவோரின் சராசரி எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இது தொற்று வேகமெடுத்து வருவதை உறுதி செய்கிறது.

இந்த நிலையில் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் கூடுதல் தடுப்பூசி போடவில்லையெனில் விரைவில் அதை செலுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், தொற்று பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இருப்பினும் பொது முடக்கம் அறிவிக்கும் திட்டம் அரசிடம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கோடை மழையில் வெள்ள நிவாரணம்: அப்டேட் குமாரு

விமர்சனம்: இங்க நான் தான் கிங்கு!

தமிழகத்தில் எந்தெந்த இடங்களில் கனமழை? வானிலை மையம் ரிப்போர்ட்!

2025 ஐபிஎல் முதல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை: காரணம் என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share