சென்னை, காமாட்சி மருத்துவமனை சந்திப்பில் மேம்பாலம் கட்ட நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படும் இடங்களில் ஒன்று காமாட்சி மருத்துவமனை சந்திப்பு.
காமாட்சி மருத்துவமனை சிக்னலை பொறுத்தவரை, பல்லாவரம் குரோம்பேட்டை, தாம்பரம் செல்ல பலரும் ரேடியல் சாலையை பயன்படுத்துகிறார்கள். ஓஎம்ஆர் சாலையில் உள்ள அலுவலகங்களுக்கு செல்லவும் இந்த வழியை பயன்படுத்துகிறார்கள். பள்ளிக்கரணை, மேடவாக்கம் செல்லவும், வேளச்சேரி கிண்டி, அடையாறு செல்லவும் முக்கியமான சந்திப்பாக காமாட்சி மருத்துவமனை சந்திப்பு உள்ளது.
இதன் காரணமாக காலை மற்றும் மாலை வேளையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சரியான நேரத்துக்கு அலுவலகம் செல்ல முடியாமல் தினசரி அந்த வழியை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
இந்த நிலையில் காமாட்சி மருத்துவமனை சந்திப்பில், காத்திருப்பு நேரத்தை குறைக்கும் வகையில் பல்லாவரம்-துரைபாக்கம் ரேடியல் சாலையில் காமாட்சி மருத்துவமனையில் இருந்து சென்னை ஒன் ஐடி பூங்கா வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான டிபிஆர் எனப்படும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது என்கிறார்கள் நெடுஞ்சாலைத் துறை வட்டாரத்தில்.
இந்த திட்டத்துக்காக நியமிக்கப்பட்ட நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் தரப்பில், டிபிஆர் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பணி நிறைவடைய சில மாதங்கள் ஆகும். எல்லா நேரத்திலும் அதிகபடியான வாகனங்கள் செல்லும் வகையில் முக்கியமான சந்திப்பாக காமாட்சி மருத்துவமனை சந்திப்பு உள்ளது. எனவே வேளச்சேரி – தாம்பரம் வழியில் இருக்கும் மேம்பாலத்தை விட உயர்மட்டமாக இந்த பாலம் அமைக்கப்படும்” என்று கூறுகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
தேசிய கீதம் சர்ச்சை : கடந்த ஆண்டே ஆளுநருக்கு விளக்கமளித்த அப்பாவு