கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் சாலை ஓரங்களில் ஜூஸ் கடைகள், தர்பூசணி பழ விற்பனை கடைகள் அதிகரித்துள்ளன. New beer varieties introduced
இந்தநிலையில் மதுபிரியர்களுக்காக டாஸ்மாக் நிறுவனம் புதுவகை பீர்களை அறிமுகம் செய்துள்ளது. New beer varieties introduced
தமிழ்நாட்டில் 4,700க்கும் அதிகமான டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் அரசுக்கு வருமானம் அதிகளவு கிடைக்கிறது.
2003-04-ஆண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.3,639.93 கோடி வருவாய் கிடைத்தது. அடுத்தது, 2008-2009ஆம் ஆண்டில் டாஸ்மாக் வருவாய் 10 ஆயிரம் கோடியை தாண்டியது.
2012-2013ஆம் ஆண்டி 20 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை எட்டியது. 2018-19ஆம் ஆண்டில் 30 ஆயிரம் கோடியையும், 2022-23 ஆண்டில் ரூ.40 ஆயிரம் கோடியையும் கடந்தது.
2024-25ஆம் ஆண்டில் டாஸ்மாக் வருவாய் அதிகரித்து ரூ.1,734.54 கோடி அதிகரித்து ரூ.45,885.67 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆனதாக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் டாஸ்மாக் வருவாய் இலக்கை ரூ.50 ஆயிரம் கோடியாக அரசு நிர்ணயித்துள்ளது.
டாஸ்மாக் கடைகளில் சராசரியாக நாளொன்றுக்கு 1.60 லட்சம் மது பெட்டிகள் விற்பனையாகின்றன. இதில், 85 லட்சம் பெட்டிகள் பீர் வகைகள் ஆகும்.
இந்தநிலையில் கோடைக்காலத்தில் மதுபிரியர்களை குஷிப்படுத்த 6 புதிய வகை பீர் பாட்டில்களை டாஸ்மாக் அறிமுகம் செய்திருக்கிறது.
தெலுங்கானா,கர்நாடகா மாநிலங்களில் விற்கப்படும் பிளாக் பஸ்டர் பீர் கடந்த வாரம் டாஸ்மாக் கடைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.
கர்நாடகாவில் தயாரிக்கப்பட்ட பிளாக் போர்ட், உட்பெக்கர் லார்ஜர் ஆகிய பீர் வகைகளும் விற்பனைக்கு வந்துள்ளது.
உட்பெக்கர் என்பது பார்லி வகை தானியங்கள் மூலம் தயாரிக்கப்படும் பீர் வகைகளாகும். அதுபோன்று, லெகர் பிளையிங் மங்கி லெகர், ஹண்டர் சூப்பர் ஸ்டிராங் ஆகிய பீர் வகைகளும் டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த பீர் வகைகளின் விலை ரூ.182 (650ml strong beer) முதல் ரூ.250 (650ml lager wheat beer) வரை இருக்கும். தற்போதுள்ள பீர் பிராண்டுகளின் விலை ரூ.140 முதல் ரூ.210 வரை விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. New beer varieties introduced
