அடுத்த போப் டொனால்ட் டிரம்ப் தானா? இது லிஸ்ட்ல இல்லையே!

Published On:

| By christopher

netizens voice aginst trump after his pope image

போப் உடையில் இருப்பது போன்ற தனது ஏஐ புகைப்படத்தை டிரம்ப் வெளியிட்டுள்ளது இணைய உலகில் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. netizens voice aginst trump after his pope image

அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்’ என கூறியிருந்த டிரம்ப் போப் போல் ஆடை அணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT

கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மதத் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த 21ஆம் தேதி வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது உடல் ரோமில் உள்ள புனித மேரி பசிலிக்கா பேராலயத்தில் ஆறு நாட்களுக்கு பிறகு அடக்கம் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இதனையடுத்து புதிய போப்பை தேர்வு செய்வதற்கான பணிகளில் வாடிகன் தயாராகி வருகிறது. அதற்காக போப்பை தேர்வு செய்யும் தகுதி படைத்த 80 வயதுக்குட்பட்ட 135 கர்தினல்கள் வாடிகனில் கூடியுள்ளனர். அவர்களில் இத்தாலியைச் சேர்ந்த கார்தினல் பியட்ரோ பரோலின் (வயது 70) அடுத்த போப் ஆக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே இரண்டு நாட்களுக்கு முன்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் அடுத்த போப் தேர்வு குறித்து பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினர்.

ADVERTISEMENT

அதற்கு அவர் “நான் போப்பாக இருக்க விரும்புகிறேன். அதுவே என் முதல் தேர்வாக இருக்கும்” என நகைச்சுவையாக பதில் அளித்திருந்தார்.

இந்நிலையில் இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், போப் உடையில் இருப்பது போன்ற ஒரு ஏஐ புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் டிரம்ப். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனையடுத்து, ’இதன் நோக்கம் என்ன?… இது அவசியமா?‘, ’இது அபத்தமானது’, ’நீங்கள் நரகத்திற்கு செல்வீர்கள்’, ’டிரம்பிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை, அவமரியாதை ஏற்படுத்திவிட்டீகள்’ என நெட்டிசன்கள் டிரம்பின் பதிவுக்கு எதிர்வினையாற்றி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share