செம்பி படத்தின் ட்ரைலர் வெளியானபோது அதில் இடம்பெற்றிருந்த உதயநிதிக்கு எதிரான வசனம் படத்தில் நீக்கப்பட்டுள்ளதை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
திமுக ஆட்சிக்கு வந்த உடன் நீட் தேர்வு நிச்சயம் ரத்து செய்யப்படும் என்று திமுக இளைஞரணி செயலாளரும் , தற்போது விளையாட்டுதுறை அமைச்சராகவும் உள்ள உதயநிதி ஸ்டாலின் கூறினார். ஆனால் இதுவரை நீட் தேர்வு தமிழகத்தில் ரத்து செய்யப்படவில்லை.
இந்நிலையில், பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான செம்பி திரைப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியானது அந்த ட்ரைலரின் இறுதியில் ஒரு வசனம் இடம்பெற்று இருக்கும், அதில் அரசியல்வாதி ஒருவர் தனக்கு ஓட்டு போட்டால் உனது பேத்தியை டாக்டர் ஆக்கி விடுவேன் என கூறுவார்.
இதையடுத்து கோவை சரளாவிடம் அவரது பேத்தி, ”பாட்டி நீ அந்த மாமாவுக்கே ஓட்டு போட்ரு அவர் என்னைய டாக்டர் ஆக்கிடுவாரு” என கூறுவாள்.
இதற்கு பதிலளிக்கும் கோவை சரளா, ”எவனுக்கு ஓட்டு போட்டாலும் டாக்டர் ஆக முடியாது நீ நல்லா படிச்சா தான் டாக்டர் ஆக முடியும்” என கூறுவார்.
ட்ரைலரில் இந்த வசனம் இடம்பெற்றிருந்தபோதே இது உதயநிதியை கூறுவது போல் உள்ளது ஆகையால் இந்த சீன் படத்துல வருமான்னு தெரியல.. என்று நெட்டிசன்கள் சந்தேகம் எழுப்பினர்.
https://twitter.com/Umamahes1411979/status/1607267543294816256?s=20&t=BRHSSdRYwXtRFIPu8lW6Tw
தற்போது நெட்டிசன்கள் சந்தேகித்த படியே இந்த வசனத்தை படத்தில் மியூட் செய்துவிட்டனர். இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளதன் காரணமாக தான் இந்த வசனத்தை மியூட் செய்துவிட்டதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்