இந்தி சினிமா உலகில் மிகப்பெரிய தயாரிப்பாளராகத் திகழ்பவர் போனி கபூர். தமிழிலும் அவருக்கு அறிமுகம் தேவை இல்லை.
நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற திரைப்படங்களைத் தயாரித்தவர். மேலும் ஆர்.ஜே. பாலாஜியின் நடிப்பில் வீட்ல விசேஷம், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களையும் தமிழில் தயாரித்தார்.
இந்திய சினிமாவின் முடிசூடா ராணியாகத் திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் இவர்தான். அழகு பதுமையாகவும், நடிப்பின் சிகரமாகவும் திகழ்ந்த ஸ்ரீதேவி சில வருடங்களுக்கு முன்பாக மரணமடைந்தார்.
இவர்களின் மூத்த மகள் ஜான்வி கபூர் தற்பொழுது இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். விரைவில் அவருக்கு அரசியல் வாரிசான ஷிகர் பஹாரியா உடன் திருமணம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் போனி கபூர் தயாரித்த ‘மைதான்’ திரைப்படத்தின் பிரீமியர் ஷோவில் நடந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக பிரியாமணி நடித்துள்ளார்.
நிகழ்ச்சியியில் பத்திரிக்கையாளர்களுக்கு பிரியாமணி போஸ் கொடுக்க, அப்பொழுது அருகில் வந்த போனி கபூர் அவரை அங்கும், இங்கும் தொட்டு நகர்த்துகிறார்.
https://twitter.com/eglobalnews23/status/1777957811353510357
இதனால் சங்கடத்துடன் பிரியாமணி நகர முயற்சி செய்கிறார். ஆனாலும் போனி கபூர் அவ்வாறு செய்வதை நிறுத்தவில்லை. சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் இந்த வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
இதைப்பார்த்த நெட்டிசன்கள் போனி கபூரின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கு முன்னாலும் போனி கபூர் ஒருமுறை இவ்வாறு நடந்து கொண்டு, ரசிகர்களின் கண்டனத்திற்கு ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது.
-பிரியங்கா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எடப்பாடியை நரியுடன் ஒப்பிட்ட அண்ணாமலை
திடீரென முடிவுக்கு வரும் பிரபல சீரியல்.. இதுதான் காரணமா?… ரசிகர்கள் ஷாக்!
‘தெறி காம்போ’ பாலிவுட் சூப்பர் ஸ்டாரை இயக்கும் ஏ. ஆர். முருகதாஸ்