“நடுராத்திரியில் வந்த மெயில்…” 30 கோடி வாடிக்கையாளர்களுக்கு நெட்ஃபிளிக்ஸ் சொன்ன செய்தி! ரூ.6.8 லட்சம் கோடி டீல்!

Published On:

| By Santhosh Raj Saravanan

netflix acquires warner bros 82 billion deal email to subscribers nothing changing

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு வர்த்தக ஒப்பந்தம் ஓடிடி (OTT) உலகில் நடந்துள்ளது. ஸ்ட்ரீமிங் உலகின் ஜாம்பவானான நெட்ஃபிளிக்ஸ் (Netflix), மற்றொரு ஜாம்பவானான வார்னர் பிரதர்ஸ் (Warner Bros.) நிறுவனத்தை விலைக்கு வாங்கியுள்ளது.

சுமார் 82.7 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.6.8 லட்சம் கோடி) மதிப்பிலான இந்த மெகா ஒப்பந்தம் கையெழுத்தான 24 மணி நேரத்தில், நெட்ஃபிளிக்ஸ் தனது 30 கோடி வாடிக்கையாளர்களுக்கும் “லேட் நைட்” ஈமெயில் ஒன்றை அனுப்பியுள்ளது.

ADVERTISEMENT

கடிதத்தில் என்ன இருக்கிறது? திடீரென நிறுவனங்கள் இணைவதால், சந்தா கட்டணம் உயருமோ அல்லது ஆப் (App) மாறுமோ என்று வாடிக்கையாளர்கள் குழப்பத்தில் இருந்தனர். அவர்களுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக அந்தக் கடிதத்தில், “இன்று எதுவும் மாறப் போவதில்லை” (Nothing is changing today) என்று நெட்ஃபிளிக்ஸ் உறுதியளித்துள்ளது.

  • நெட்ஃபிளிக்ஸ் மற்றும் எச்பிஓ மேக்ஸ் (HBO Max) ஆகியவை தற்போதைக்குத் தனித்தனி செயலிகளாகவே தொடர்ந்து இயங்கும்.
  • சந்தா கட்டணங்களில் இப்போதைக்கு எந்த மாற்றமும் இருக்காது.
  • இந்த இணைப்பு முழுமையடையக் குறைந்தது 12 முதல் 18 மாதங்கள் ஆகும். அதாவது, டிசம்பர் 2026 வரை தற்போதைய நிலையே தொடரும்.

இணையும் பிரம்மாண்டங்கள்: இந்த ஒப்பந்தம் முழுமையடைந்தால், உலகின் மிகப்பெரிய என்டர்டெயின்மெண்ட் சாம்ராஜ்யமாக நெட்ஃபிளிக்ஸ் மாறும். ஏனெனில், வார்னர் பிரதர்ஸின் ஐகானிக் படைப்புகளான ஹாரி பாட்டர் (Harry Potter), கேம் ஆஃப் த்ரோன்ஸ் (Game of Thrones), ஃப்ரெண்ட்ஸ் (Friends), பேட்மேன் (DC Universe) ஆகியவை, நெட்ஃபிளிக்ஸின் ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் (Stranger Things), ஸ்குவிட் கேம் (Squid Game) உடன் ஒரே குடையின் கீழ் வரும்.

ADVERTISEMENT

எதிர்ப்பும், அச்சமும்: நெட்ஃபிளிக்ஸ் சிஇஓ டெட் சரண்டோஸ், “இது நுகர்வோருக்கு நல்லது” என்று கூறினாலும், அமெரிக்காவில் இதற்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

  • செனட்டர்கள் எலிசபெத் வாரன் மற்றும் மைக் லீ ஆகியோர், “இது ஒரு ஏகபோக‘ (Anti-monopoly) ஆபத்தை உருவாக்கும். ஒரே நிறுவனம் சந்தையை ஆள நினைப்பது ஆபத்தானது” என்று எச்சரித்துள்ளனர்.
  • மேலும், எழுத்தாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம், இதனால் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்றும், படைப்புச் சுதந்திரம் குறையும் என்றும் அச்சம் தெரிவித்துள்ளன.

வாடிக்கையாளர்களுக்கு என்ன நடக்கும்? அரசியல்வாதிகள் எதிர்த்தாலும், வாடிக்கையாளர்களுக்கு இப்போதைக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால், 2026-க்குப் பிறகு இவை அனைத்தும் ஒரே ஆப்-குள் வரும்போது, கட்டணம் நிச்சயம் உயரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

“ஹாரி பாட்டரும், ஸ்ட்ரேஞ்சர் திங்ஸும் ஒரே இடத்துலயா?” என்று ரசிகர்கள் குஷியாக இருந்தாலும், “இதுக்கு எவ்வளவு கட்டணம் தீட்டப் போறாங்களோ?” என்ற பயமும் இருக்கத்தான் செய்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share