ADVERTISEMENT

புதிய ரூபாய் நோட்டுகளில் இந்தியாவை சீண்டும் நேபாளம்- என்ன நடந்தது?

Published On:

| By Mathi

Nepal

நேபாள நாட்டின் ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய ரூ.100 நோட்டுகள், இந்தியாவை கடும் சீற்றமடைய வைத்துள்ளது.

Gen Z புரட்சிகளால் அரசியல் நிலையற்ற சூழல் நீடித்து வரும் நேபாளம் தனது நாட்டு ரிசர்வ் வங்கி மூலம் புதிய ரூ.100 நோட்டுகளை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் பகுதிகளை தம்முடைய நாட்டின் பகுதிகளாக நேபாளம் குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT

எந்த பகுதிகளால் சர்ச்சை?

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின்

ADVERTISEMENT
  • காலாபாணி
  • லிபுலேக்
  • லிம்பியாதுரா

ஆகிய பகுதிகளைத்தான் நேபாளம் தங்களது நாட்டின் பகுதியாக ரூபாய் நோட்டுகள் மூலம் உரிமை கோரி இருக்கிறது. இப்பகுதிகளுக்கு சீனாவும் ஏற்கனவே உரிமை கோரியது.

இந்தியாவின் பகுதிகளை நேபாளம் ஏற்கனவே உரிமை கோரி பெரும் சர்ச்சையானது. கடந்த 2020-ம் ஆண்டு இதே 3 பகுதிகளை தங்களது நாட்டின் வரைபடத்தில் இணைத்து நேபாளம் வெளியிட்டது பெரும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share