புதிய கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலங்களுக்கு மத்திய அரசு போதுமான நிதி வழங்க மறுக்கிறது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 9) காலை தனது எக்ஸ் தளத்தில் விமர்சித்திருந்த நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்துள்ளார்.
தி இந்து ஆங்கில நாளிதழின் இன்றையை பதிப்பில், புதிய கல்வி கொள்கையை ஏற்காத 5 மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் மற்றும் டெல்லிக்கு மத்திய அரசு சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் நிதி வழங்க மறுக்கிறது என்று ஒரு செய்தி வெளிவந்திருந்தது.
இந்தச் செய்தியை மேற்கோள் காட்டி, மத்தியில் ஆளும் பாஜக அரசை முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், ஸ்டாலினின் குற்றச்சாட்டிற்கு தர்மேந்திர பிரதான் பதிலளித்துள்ளார்.
அதில் அவர்
“ஜனநாயகத்தில் மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி இருப்பது எப்போதும் வரவேற்கத்தக்கது. இருப்பினும் ஒரு கருத்தை முன்வைப்பதற்காக மற்ற மாநிலங்களை ஒன்றுக்கொன்று எதிராக நிறுத்துவது, அரசியலமைப்புக்கு எதிரானது. பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டது.
தமிழ் போன்ற இந்திய தாய்மொழிகளில் கல்வி கற்றுக்கொடுப்பதை நீங்கள் எதிர்க்கிறீர்களா?
தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பாடப்புத்தகங்கள் உருவாக்குவதை நீங்கள் எதிர்க்கிறீர்களா?
தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் தேர்வுகள் நடத்தப்படுவதை நீங்கள் எதிர்க்கிறீர்களா?
சமத்துவம், எதிர்காலத்திற்கு தேவையான சிந்தனை போன்றவைகளை தனது கட்டமைப்பில் கொண்டுள்ள புதிய கல்வி கொள்கையை நீங்கள் எதிர்க்கிறீர்களா?
இந்த கேள்விகளுக்கு உங்களின் பதில் “இல்லை” என்றால், அரசியல் ஆதாயத்திற்கு பதிலாக தமிழ்நாட்டு மாணவர்களின் நலனிற்கு முன்னுரிமை வழங்கி புதிய கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிவிட்டுள்ளார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கிண்டி ரேஸ் கோர்ஸ்.. “காலி செய்ய அவகாசம் கொடுக்காதது ஏன்?” – உயர்நீதிமன்றம் கேள்வி!
US Open 2024: பட்டம் வென்று ஜன்னிக் சின்னர், அரியானா சபலென்கா சாதனை!
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 1,500 கிலோ கெட்டுப்போன இறைச்சி… பொதுமக்கள் ஷாக்!
Comments are closed.