முன்னாள் காவல்துறை அதிகாரி ஜாகிர் உசேன் கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Nellai Zakir Hussain murder
திருநெல்வேலி டவுன், மூர்த்தி ஜாகன் தைக்கா தெரு பகுதியைச் சேர்ந்தவர் 60 வயதான பிஜிலி என்ற ஜாகிர் உசேன். இவர் நேற்று (மார்ச் 18) காலை 5 மணியளவில் டவுன் தெற்கு மவுண்ட் ரோட்டில் உள்ள காஜா பீடி கம்பெனி அருகில் மசூதியில் நோன்பு திறந்துவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று ஜாகிர் உசேனை சாலையில் வெட்டி சாய்த்துவிட்டு தப்பி ஓடிவிட்டது.
இந்த கொலை தொடர்பாக இன்று (மார்ச் 19) சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “கொலையில் தொடர்புடையவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது” என்று உறுதி அளித்தார்.

யார் இந்த ஜாகிர் உசேன்? Nellai Zakir Hussain murder
ஜாகிர் உசேனை அவரது பகுதியைச் சேர்ந்தவர்கள் பிஜிலி என்று அழைக்கிறார்கள். 1986-ல் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்து உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றார். துணை முதல்வராக இருந்த தற்போதைய முதல்வர் ஸ்டாலினுக்கும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் பாதுகாப்பு பணியில் பங்கெடுத்தவர்.
2009-ல் விருப்ப ஓய்வு பெற்று சமூக சேவையில் ஈடுபட்டார். திருநெல்வேலி டவுன் பகுதியில் உள்ள மசூதிக்கு முத்தவல்லியாக (வக்ஃபாக (தானமாக) வழங்கப்பட்ட சொத்துக்களை நிர்வகிப்பவர் அல்லது மசூதியின் நிர்வாகி என்று பொருள்) இருந்து வந்தார். தான் வசிக்கும் பகுதியில் ஆக்கிரமிப்பு, மக்கள் பிரச்சினை என எதுவாக இருந்தாலும் எஸ்.ஐ. முதல் டிஜிபி வரையிலும், விஏஓ முதல் முதல்வர் வரைக்கும் புகார் எழுதக் கூடியவர் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.
சில சமயங்களில் நேரடியாக களத்தில் இறங்கியும் போராடக் கூடியவர். சில மாதங்களுக்கு முன்பு பள்ளிவாசல் இடத்திற்கு தனது பெயரில் மின் இணைப்பு வழங்கக் கோரி மின்வாரியத்தில் கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த உதவி பொறியாளர் (ஏஇ) பள்ளிவாசல் சொத்துக்கு தனிநபர் பெயரில் வழங்க முடியாது என்று மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, உதவி பொறியாளர் கொடுத்த புகாரின் பேரில் ஜாகிர் உசேன் மீது திருநெல்வேலி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சொத்தால் ஏற்பட்ட விரோதம்… Nellai Zakir Hussain murder
எஸ்சி/எஸ்டி பிரிவிலும் இவர் மீது வழக்கு போடப்பட்டது.
திருநெல்வேலி டவுன் டூ பேட்டை சாலையில் பள்ளிவாசலுக்கு சொந்தமாக கோடிக்கணக்கில் சொத்துகள் உள்ளது. அந்த சொத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி நடந்த நிலையில் அதை ஜாகிர் உசேன் தடுத்ததால், கிருஷ்ணமூர்த்தி என்ற தாவூகித்துக்கும் இவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த கிருஷ்ணமூர்த்தி பட்டியலினத்தைச் சேர்ந்தவர். வழக்கறிஞர் ஆவார். இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த நூர்ஜகானை காதலித்து திருமணம் செய்து கொள்வதற்காக கிருஷ்ணமூர்த்தி இஸ்லாமிய மதத்துக்கு மாறினார்.
இந்நிலையில், பள்ளிவாசலுக்கு உட்பட்ட சொத்து, என்னுடைய பாட்டியுடையது. அதை நான் தான் அனுபவிப்பேன் என்று உரிமை கோரினார் நூர்ஜகான். மனைவிக்கு ஆதரவாக தாவூகித் இருந்து வருகிறார். இவர்களுக்கு திமுக பிரமுகர்கள் சிலர் ஆதரவாக இருந்து வந்ததாக தகவல்கள் வருகின்றன.
ஆனால், ஜாகிர் உசேன் பள்ளிவாசல் சொத்தை நூர்ஜகான்,தாவூகித் உட்பட சிலர் ஆக்கிரமிக்க முயற்சிக்கிறார்கள் என்று வக்ஃப் போர்டு சேர்மேன் நவாஸ் கனிக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கு புகார் அனுப்பினார். இந்த பிரச்சினை சுமார் 6 மாத காலமாக இருந்து வந்தது.
இந்தநிலையில் தான் கடந்த 9-ஆம் தேதி தாவூகித், திருநெல்வேலி டவுன் இன்ஸ்பெக்டரிடம் தன்னை ஜாகிர் உசேன் சாதி பெயரை சொல்லி திட்டி மிரட்டியதாக புகார் கொடுத்துள்ளார். இதனால் ஜாகிர் உசேன், அவரது மனைவி சுஜி சுனிதா மீது எஸ்.சி/எஸ்.டி வழக்கில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதற்கு முன்பு, தனக்கு கொலை மிரட்டல் வருவதாக ஜாகிர் உசேன் புகார் கொடுத்துள்ளார். மேலும், தன் மீது தாவூகித் கொடுத்த புகார் மீது எஸ்.சி/எஸ்.டி வழக்குப்பதிவு செய்தது செல்லாது என்றும் காரணம், அவர் பட்டியலின சமூகத்தைச் (தேவேந்திர குல வேளாளர்) சேர்ந்தவர். தற்போது இஸ்லாமியராக மதம் மாறிகொண்டவர் எப்படி பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவராவார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதனால் எஸ்.சி / எஸ்.டி வழக்கில் ஜாகிர் உசேனையும், அவரது மனைவியையும் போலீஸ் கைது செய்யவில்லை.
இருந்தாலும் உள்ளூர் திமுக செல்வாக்கை பயன்படுத்தி காவல் உதவி ஆணையர் செந்தில் குமார், இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன் இருவரது மூலமாக தொடர்ந்து ஜாகிர் உசேனையும் அவரது மனைவியையும் விசாரணை என்று அழைப்பதும், மிரட்டுவதுமாக இருந்தனர்.
கடைசியில் தனக்கு வந்த அச்சுறுத்தல், மிரட்டலை தொடர்ந்து தாவூகித் உள்ளிட்டோர் மீது இன்ஸ்பெக்டர் முதல் முதல்வர் வரை புகார் அனுப்பியிருக்கிறார் ஜாகிர் உசேன்.
இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அலட்சியம் காட்டியதாலே இந்த கொலை நடந்திருக்கிறது என்கிறார்கள் அவரது உறவினர்கள்.
போராட்டம்…
இந்நிலையில், ஜாகிர் உசேன் மனைவி சுஜி சுனிதா மற்றும் அவரது உறவினர்கள் இஸ்லாமிய ஜனநாயக கூட்டணி நிறுவனத் தலைவர் சுலைமான் ஆகியோருடன் டவுன் காவல் நிலையத்துக்கு சென்று, இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன் மீதும், உதவி ஆணையர் செந்தில் குமார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்ஸ்பெக்டரிம் பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் தான் இந்த படுகொலை நடந்துள்ளது. இந்த கொலைக்கு இவர்கள்தான் காரணம் என்றும் உடலை வாங்கமாட்டோம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் திருநெல்வேலி காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி, பேச்சுவார்த்தை நடத்தினார்.
“விரைவில் இன்ஸ்பெக்டர் மற்றும் உதவி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்கிறேன். விரைந்து குற்றவாளியை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதி அளித்தார்.
குற்றவாளிகள் சரண்டர்…Nella0i Zakir Hussain murder
இந்தசூழலில் நேற்று (மார்ச் 18) காலை 10.30 மணியளவில் திருநெல்வேலி ஜே.எம்.5 நீதிமன்றத்தில் தாவூகித் தம்பி கார்த்திக், நூர்ஜகான் தம்பி அக்பர் ஷா இருவரும் சரண் அடைந்தனர்.

தனிப்படை விசாரணை… Nellai Zakir Hussain murder
எனினும் இவர்கள் உண்மையான குற்றவாளியா? வேறு யாரேனும் இந்த கொலையில் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா? என கொலை நடந்த பகுதியில் பயன்படுத்தப்பட்ட செல்போன் அழைப்புகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். மேலும், இஸ்லாமிய தீவிரவாத குழு ஈடுபட்டிருக்கலாமா என்ற கோணத்திலும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்த கொலை குறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்த போது, “தலைமறைவாக உள்ள தாவூகித்தை இன்று போலீசார் ரெட்டியார்பட்டி பகுதியில் வைத்து சுட்டுப்பிடித்தனர். நூர்ஜகானை போலீசார் தேடி வருகின்றனர். இந்த வழக்கில் குறைந்தபட்சம் இன்ஸ்பெக்ட்டரும், உதவி ஆணையரும் எதிர் தரப்பை அழைத்து கண்டித்திருந்தால் கூட இந்த கொலை நடந்திருக்காது” என்கிறார்கள்.
தற்போது இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். உதவி ஆணையர் செந்தில் குமார் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். Nellai Zakir Hussain murdermurder