நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக வேட்பாளர் கிட்டு (எ) ராமகிருஷ்ணன் இன்று (ஆகஸ்ட் 5) வெற்றி பெற்றுள்ளார்.
நெல்லை மாநகராட்சி திமுக மேயர் சரவணன் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நேற்று (ஆகஸ்ட் 4) நெல்லையில் நடைபெற்ற வேட்பாளர் தேர்வு கூட்டத்தில், நெல்லை மேயர் வேட்பாளராக ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார்.
இந்தநிலையில், இன்று காலை திமுக சார்பில் மேயர் பதவிக்கு ராமகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்தார். அதவேளையில், திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட பவுல்ராஜூம் வேட்புமனு தாக்கல் செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது. மதியம் 12.30 மணிக்கு மறைமுக வாக்குப்பதிவு தொடங்கிய பிறகு மாநகராட்சி மன்றத்திற்கு வந்த முன்னாள் மேயர் சரவணன் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை.
இதனைதொடர்ந்து நடைபெற்ற வாக்குப்பதிவில் 54 வாக்குகள் பதிவான நிலையில், ஒருவாக்கு செல்லாது என அறிவிக்கப்பட்டது. திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன் 30 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ராமகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்ட பவுல்ராஜ் 23 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…