முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டபடி ஸ்டிரைக் – போக்குவரத்து தொழிற்சங்கங்கள்!

Published On:

| By Kavi

strike as planned tamilnadu transport unions

strike as planned tamilnadu transport unions

முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், நாளை திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT

15ஆவது ஊதிய ஒப்பந்தத்தைப் பேசத் தொடங்குவது, வாரிசுக்கு வேலை, பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 6 கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஜனவரி 9ஆம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தன.

பொங்கல் பண்டிகை நெருங்கும் வேளையில் போராட்டம் அறிவிக்கப்பட்டதால், போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் தமிழக அரசு இருமுறை பேச்சுவார்த்தை நடத்தியது.

ADVERTISEMENT

இந்த இருமுறையும் தோல்வியில் முடிவடைந்ததால் இன்று (ஜனவரி 8) முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை ஆணையரகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அமைச்சர் சிவசங்கர் அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் இளங்கோ, மாநகரப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆல்பி ஜான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்த பேச்சுவார்த்தைக்கு பின் சிஐடியு தொழிற்சங்க தலைவர் சவுந்தரராஜன் அளித்த பேட்டியில்,

“எங்கள் கோரிக்கைகளில் எதையும் இப்போது ஏற்க முடியாது. பொங்கலுக்குப் பிறகு பேசிக்கொள்ளலாம் என்று கூறிவிட்டார்கள். இது முற்றிலும் நியாயமற்றது. ஏற்க முடியாதது. அமைச்சர் வந்தும் இதையே சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

இந்த அரசு போக்குவரத்து ஊழியர்களை இரண்டாம் தர மக்களாகப் பார்க்கிறது. வேறு எந்த துறை ஊழியர்களுக்கும் இழைக்கப்படாத அநீதியை எங்களுக்குச் செய்கிறார்கள். பஞ்சப்படி என்பது எங்களுக்குக் கொடுக்க வேண்டிய பாக்கி. 8 ஆண்டுகளாகக் கொடுக்கப்படாமல் இருக்கும் கடன்.

ஓய்வு பெற்றவர்கள் 96,000 பேருக்கு மாதம் மாதம் 6,000 ரூபாய் வராமல் இருக்கிறது. இதையாவது உடனடியாக கொடுங்கள் என்று கேட்டோம்.

தற்போது பணியில் இருக்கக் கூடிய ஊழியர்களுக்கு 4 மாத அகவிலைப்படி தரவில்லை. இந்த நிலுவைத் தொகையைக் கூட கொடுக்க மறுக்கிறார்கள்.

எங்களது போராட்டம் திட்டமிட்டபடி நாளை நடைபெறும். மீண்டும் அமைச்சர் தரப்பில் பேச அழைத்தாலும் தயாராக இருக்கிறோம். ” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் அமைச்சர் சிவசங்கர் தரப்பில், ‘தொமுச உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் பணியில் ஈடுபடுவார்கள் என்பதால் நாளை உறுதியாகப் பேருந்துகள் இயங்கும். ஏற்கனவே போக்குவரத்து ஊழியர்களின் இரண்டு கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கு பிறகு மற்ற கோரிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும்.  தற்போதைய நிதிநிலை சூழலில் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியாத சூழல் உள்ளது” என தெரிவிக்கப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

”திமிர்பிடித்த பாஜக அரசுக்கு எதிரான நீதியின் வெற்றி”: ராகுல்காந்தி

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்? – பாலச்சந்திரன் அறிவிப்பு!

strike as planned tamilnadu transport unions

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share