ADVERTISEMENT

நீட் தேர்வு முடிவுகள் எப்போது?

Published On:

| By christopher

நீட் NEET தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாகும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மாதம் 17ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 543 நகரங்களில் 3800 மேற்பட்ட தேர்வு மையங்களில் நடைபெற்ற இத்தேர்வில் 18 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வுக்காக விண்ணப்பித்து தேர்வை எதிர் கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைப்பு!

நீட் தேர்வு முடிவுகள் இம்மாதம் 21 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் பொறியியல் பொது பிரிவுக்கான கலந்தாய்வுகளும் தமிழகத்தில் அறிவிக்கப்பட்டன.

ADVERTISEMENT

ஆனால் நீட் NEET தேர்வு முடிவுகள் வெளியாவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி நேற்று அறிவித்தார்.

இந்நிலையில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வரும் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் தேர்வுக்கான விடைத்தாள் குறிப்புகள் வரும் 30-ந் தேதிக்குள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இணையதள முகவரியில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

நாய்ஸ்ஃபிட் கோர் 2 ஸ்மார்ட்வாட்ச்: அசத்தும் அம்சங்கள் : என்னென்ன தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share