நாடு முழுவதும் வரும் ஜூலை 17 ஆம் தேதி இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் , இந்த ஆண்டுக்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு ஜூலை 17ஆம் தேதி நடைபெறும் என்று தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளது.
ஏப்ரல் 2ஆம் தேதி முதல் மே 7ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்தி, தமிழ் உட்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு 16.4 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், அதில், 95.6% பேர் தேர்வெழுதினர். அதில், 8,70,074 பேர் அதாவது 56.4% பேர் தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
**- பிரியா**
