நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு- எந்த வெப்சைட்டில் எப்படி டவுன்லோடு செய்வது?

Published On:

| By Mathi

Neet Admit Card New

தேசிய தேர்வு முகமையால் (NTA) நடத்தப்படும் நீட் இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான (NEET UG 2026) நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட்டுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்கள் ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 3-ந் தேதி இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

தமிழகத்தின் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதத் தயாராகி வருகின்றனர்.

ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்வது எப்படி?

  • தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான neet.nta.nic.in அல்லது exams.nta.ac.in/NEET-ல் ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்யலாம்.
  • இணையதளத்திற்குச் சென்று உங்கள் விண்ணப்ப எண் (Application Number) பதிவிடவும்.
  • பிறந்த தேதியைப் (Date of Birth) பயன்படுத்தி லாகின் செய்யவும்.
  • ஹால் டிக்கெட்டைப் சரிபார்த்து பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்

ஹால் டிக்கெட்டில் உங்கள் தேர்வு மைய முகவரி குறிப்பிடப்பட்டிருக்கும். அதை கவனமாக சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

ஹால் டிக்கெட்டுடன், பாஸ்போர்ட் அளவு போட்டோ மற்றும் செல்லுபடியாகும் அரசு அடையாள அட்டை (ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் அட்டை) ஆகியவற்றைக் கொண்டு செல்ல வேண்டும்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகதுறை அனுபவம், ’தினமணி’, ‘இன்தாம்’, ஆஸ்திரேலியா தமிழ் வானொலி, சன் நியூஸ், ஒன் இந்தியா தமிழில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share