நான் மகான் அல்ல, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட பல படங்களில் நீலிமா ராணி நடித்துள்ளார். இந்த நிலையில், நடிகை நீலிமா ராணி தனது வாழ்க்கையின் கஷ்டப்பட்ட காலம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.neelima rani explains about loss
இது குறித்து பிஹைன்ட்வுட்ஸ் அக்கினி சிறகு நிகழ்ச்சியில் அவர் பேசியிருப்பதாவது, ‘2011 ஆம் ஆண்டு நானும் என் கணவரும் இணைந்து ரூ. 4.5 கோடி பட்ஜெட்டில் படம் எடுக்க முடிவு செய்தோம். அதற்காக வெளியில் வட்டிக்கு பணம் வாங்கி, அப்படத்தை தயாரித்தோம். ஆனால், அந்த படம் சரியாக அமையவில்லை. கடைசியில் அந்த படத்தை குப்பையில் போட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். கடன் காரணமாக தெருவுக்கே வந்து விட்டோம். வாடகை வீட்டுக்கு கூட போக முடியவில்லை. இந்த சமயத்தில் நண்பர் ஒருவர்தான் ஆதரவு தந்தார். அவரின் வீட்டில் ஒரு அறையில் நாங்கள் தங்கியிருந்தோம்.
அதே வேளையில் மீண்டும் சின்னத்திரையில் நான் மீண்டும் நடிச்சேன். வாணி ராணி, தலையணை பூக்கள், தாமரை என தொடர்ச்சியாக பல சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி, பணம் வந்த பிறகுதான் மீண்டும் ஒரு வாடகை வீட்டுக்கு போனாம். தொடர்ந்து, 2017ல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் என்றென்றும் புன்னகை, நிறைமாறாத பூக்கள் என சீரியல்களை தயாரித்தோம். இப்படித்தான் எங்கள் வாழ்க்கையில் இருண்ட காலத்தை கடந்து வந்தோம்.neelima rani explains about
ஆனால், மீண்டும் நாங்கள் படம் தயாரிப்போம். தோல்விகள் வரும். சோர்ந்து போய் உட்கார்ந்து விட கூடாது. நமது கைதான் நமக்கு உதவிக்கு வரும். உங்க வீட்டில் இருக்கக் கூடிய உங்கள் குடும்பத்தினருடன் 10 நிமிஷம் பேசுங்க. குடும்பத்தோட நேரத்தை செலவிட தொடங்குங்க. நண்பர்கள் முக்கியம்தான். ஆனால், நாம சாவும் வரை அவங்க கூட இருப்பாங்களா? ஒரு நண்பர் சாவு வரை நம்ம கூட இருந்தா சந்தோஷம்தான். ஆனால், அப்படி அவங்கள நம்ம கூட இருக்கனும்னு நாம எதிர்பார்க்க வேண்டாம். அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, தங்கை, அக்காதான் நம்ம கூட கடைசி வரை வருவாங்க. எனவே, குடும்பத்தினருடன் நேரத்தை செலவு செய்யுங்கள்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.