NPCI -யின் புதிய விதிமுறை : போன் பே… ஜி பே… பயனர்களின் கவனத்துக்கு!

Published On:

| By Kavi

ncpi new rules for UPI Payments

ஏப்ரல் 1, 2025 முதல், மோசடியைத் தடுக்க, வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட செயலற்ற மொபைல் எண்களை UPI-யில் இருந்து இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) நீக்க உள்ளது.  ncpi new rules for UPI Payments

இந்தியா டிஜிட்டல் மயமாகி வரும் நிலையில் மொபைல் மூலம் 24*7 மற்றும் 365 நாட்களும் உடனடி பணப் பரிமாற்றம் செய்வதற்காக கொண்டு வரப்பட்டதுதான் யுபிஐ. இதை இந்தியாவில்  35 கோடி பேர் பயன்படுத்துகின்றனர்.  

550க்கும் மேற்பட்ட வங்கிகள் UPI கட்டமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. Google Pay, WhatsApp, Amazon Pay, PhonePe மற்றும் BHIM  என 77 யுபிஐ ஆப்கள் உள்ளன.  

இந்தியாவில் யுபிஐ மூலம் சராசரியாக 50 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. பரிவர்த்தனைகளின் மதிப்பு ரூ.30,000 கோடியைத் தாண்டும்.

இந்தநிலையில் யுபிசி பயனர்களுக்கு NPCI முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்று (2025 ஏப்ரல் 1) முதல், நீண்ட காலமாக செயலற்ற நிலையில் இருக்கும் மொபைல் எண்கள் யுபிஐ அமைப்பிலிருந்து நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

சைபர் மோசடி மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களை தடுக்க இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ஒரு மொபைல் எண் முடக்கப்பட்டவுடன் அந்த எண்ணை தொலை தொடர்பு நிறுவனங்கள்  வேறு பயனருக்கு மீண்டும் ஒதுக்குகின்றன.

இந்த மறு ஒதுக்கீடு பழைய எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் மோசடி ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. இதை வங்கிகள் மற்றும் யுபிஐ செயலிகள் தங்கள் அமைப்புகளில் இருந்து செயலற்ற மொபைல் எண்களை வாரம்தோறும் அடையாளம் கண்டு நீக்க தேசிய கொடுப்பனவு கழகம் உத்தரவிட்டுள்ளது

சிக்கல்களை தவிர்கக் என்ன செய்வது? ncpi new rules for UPI Payments

உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை சரிபார்த்து, அது பழையதாகவோ அல்லது செயலற்றதாகவோ இருந்தால்  உடனடியாக புதுப்பிக்கவும். 

உங்கள் தொலைத்தொடர்பு வழங்குநரை (ஜியோ, ஏர்டெல், விஐ, பிஎஸ்என்எல்) தொடர்பு கொண்டு அந்த எண் இன்னும் உங்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.

உங்கள் எண் முடக்கப்பட்டு வேறு யாருக்காவது மீண்டும் ஒதுக்கப்பட்டிருந்தால், உங்கள் வங்கிக்குச் சென்று புதிய எண்ணை இணைக்கவும்.

மீண்டும் UPI-யில்  மொபைல் எண் மற்றும் வங்கி விவரங்களைப் புதுப்பிக்கவும். ncpi new rules for UPI Payments

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share